மார்ச்.28., திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளில் இருந்து விலகி திரளான இளைஞர்கள் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு மாநில துணைச் செயலாளர் AJS.தாஜூதீன் முன்னிலையில் மஜக-வில் இணைந்தனர். புதிதாக இணைந்த இளைஞர்கள் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுடைய தலைமையை ஏற்று மஜக-வில் இணைந்தது மகிழ்ச்சியை தருகிறது என்று தெரிவித்தனர். தகவல்: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #திருவண்ணாமலை_மாவட்டம் 28.03.2024.
Author: admin
அபுதாபியில்… MKP சார்பில் நடைபெற்ற இதயங்களை இணைத்த இஃப்தார் நிகழ்வு….
மார்ச் 28, ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) அபுதாபி மாநகர கிளையின் சார்பாக "இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி" நேற்று அபுதாபி ஏர்போட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார் பாய் உணவகத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வினை அபுதாபி மாநகரச் செயலாளர் சகோ. லால்பேட்டை ரைசுல் இஸ்லாம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். முதலில் இறைவேதம் ஓதி சீர்காழி அப்துல் காதிர் அவர்கள் தொடங்கி வைக்க, அபுதாபி மாநகர துணைச் செயலாளர் மதுரை ராஜா உசேன் அவர்கள் வந்திருந்த பேராளர்களையும், மனிதநேய சொந்தங்களையும் வரவேற்றார். இந்நிகழ்வில் அபுதாபி மாநகர ஆலோசகர் ஆயங்குடி முஹம்மது ரியாஸ், அமீரக துணைச் செயலாளர் தோப்புத்துறை ரசூல் முஹம்மது, அமீரக ஆலோசகர் தோப்புத்துறை ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அசாலி அஹமது அவர்களும், மர்ஹாபா சமூக நலப் பேரவையின் தலைமை ஒருங்கினைப்பாளர் சுஹைபுத்தின் அவர்களும், அபுதாபி மக்கள் மன்றத்தின் நிறுவனரும், அபுதாபியில் பிரசித்திப் பெற்ற சமூக ஆர்வலருமான சகோ. சிவகுமார் அவர்களும்,
நெல்லையில்… இந்தியா கூட்டணியின் வெற்றி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்…. மஜக நிர்வாகிகள் பங்கேற்பு….
இந்தியா கூட்டணியின் நெல்லை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு. இராபர்ட் புரூஸ் அவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் அண்ணாச்சி, திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் திரு. டி.பி.எம்.மைதீன்கான், பாளை சட்டமன்ற உறுப்பினர் திரு. அப்துல் வஹாப், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகர், திருநெல்வேலி மாநகராட்சி மேயர் திரு. சரவணன், துணை மேயர் திரு. ராஜு, பாளை மண்டல தலைவர் திரு :பிரான்சிஸ், காங்கிரஸ் மாவட்ட தலைவர் திரு.சங்கர பாண்டியன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் பாளை A.M ஃபாரூக் மற்றும் சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள், தமிழ் புலிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், உள்ளிட்ட தோழமை அமைப்புகளின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட பொருளாளர் முகமது அலி, மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பால் சேக், நாங்குநேரி பொறுப்பாளர் முகமது அலியார் மண்டல இளைஞர் அணி செயலாளர் அசரப் பாளை பகுதி செயலாளர் காஜா மாநில இளைஞர் அணி துணை செயலாளர் அலிஃப் A. பிலால் ராஜா மற்றும் பகுதி ஒன்றிய கழக
நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு… கேரளா கர்நாடக ஆந்திர மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு
நடைபெறும் 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரித்து களப்பணியாற்றி வருகிறது. இதனிடையே கட்சியின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில பிரிவுகள் தங்கள் நிலைபாடு குறித்து தலைமை முடிவு எடுத்து அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டன. அதை பரிசீலித்து ஜனநாயகம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம், ஆகியவற்றை காக்கும் பொருட்டு I.N.D.I A கூட்டணியை இம்மாநிலங்களில் ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் அம்மாநில மேலிட பொறுப்பாளர், மாநில துணைச் செயலாளர் ஜாவித் தலைமையிலும், கர்நாடாகாவில் அம்மாநில மேலிட பொறுப்பாளர் / மாநில துணைச் செயலாளர் ஓசூர் நௌஷாத் தலைமையிலும், ஆந்திராவில் அதன் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளர் தாஜ்தீன் தலைமையிலும் தேர்தல் களப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது. இம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினரோடும், அவர்களது தலைமையில் இயங்கும் கூட்டணி கட்சியினரோடும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இணைந்து பணியாற்றுவார்கள் . ஜனநாயகம் காக்கும் அறப்போரில் விரிவான களத்தில் - தென்னிந்திய அரசியலில் எமது பங்களிப்பை செய்வதில் முழு வீச்சில் களமிறங்குவது என்றும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இவண், மு.தமிமுன் அன்சாரி, தலைவர் மனிதநேய ஜனநாயக கட்சி 28.03.2024
இராமநாதபுரத்தில்… முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு….
மார்ச்.27., I.N.D.I.A கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார். இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சையது இபுராஹிம் தலைமையில் மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் கருத்த மரைக்கா, ஆஸாத், அபுல் ஹசன், நகர செயலாளர் செய்யது அலி, MJTS தொண்டி சேக்,நகர IT WING சூரங்கோட்டை ஜாபர் கத்தார் மண்டலம் ஹக்கீம் மற்றும் நூற்றுக்கணக்கான மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தகவல்; #தேர்தல்_பணிக்குழு #மனிதநேய_ஜனநாயக_கட்சி #இராமநாதபுரம்_தொகுதி #MJK_IT_WING 27.03.2024