நாடாளுமன்ற தேர்தல் நிலைபாடு… கேரளா கர்நாடக ஆந்திர மாநிலங்களிலும் இந்தியா கூட்டணிக்கு ஆதரவு! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவிப்பு

நடைபெறும் 2024- நாடாளுமன்ற தேர்தலில் மனிதநேய ஜனநாயக கட்சி தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியை ஆதரித்து களப்பணியாற்றி வருகிறது.

இதனிடையே கட்சியின் கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநில பிரிவுகள் தங்கள் நிலைபாடு குறித்து தலைமை முடிவு எடுத்து அறிவிக்குமாறு கேட்டுக் கொண்டன.

அதை பரிசீலித்து ஜனநாயகம், சமூக நீதி, சமூக நல்லிணக்கம், ஆகியவற்றை காக்கும் பொருட்டு I.N.D.I A கூட்டணியை இம்மாநிலங்களில் ஆதரிப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அம்மாநில மேலிட பொறுப்பாளர், மாநில துணைச் செயலாளர் ஜாவித் தலைமையிலும், கர்நாடாகாவில் அம்மாநில மேலிட பொறுப்பாளர் / மாநில துணைச் செயலாளர் ஓசூர் நௌஷாத் தலைமையிலும், ஆந்திராவில் அதன் மேலிட பொறுப்பாளரும், மாநிலத் துணைச் செயலாளர் தாஜ்தீன் தலைமையிலும் தேர்தல் களப்பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்படுகிறது.

இம்மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியினரோடும், அவர்களது தலைமையில் இயங்கும் கூட்டணி கட்சியினரோடும் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இணைந்து பணியாற்றுவார்கள் .

ஜனநாயகம் காக்கும் அறப்போரில் விரிவான களத்தில் – தென்னிந்திய அரசியலில் எமது பங்களிப்பை செய்வதில் முழு வீச்சில் களமிறங்குவது என்றும் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

இவண்,
மு.தமிமுன் அன்சாரி,
தலைவர்
மனிதநேய ஜனநாயக கட்சி
28.03.2024