இராமநாதபுரத்தில்… முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை! மஜக வினர் எழுச்சியுடன் பங்கேற்பு….

மார்ச்.27.,

I.N.D.I.A கூட்டணியின் இராமநாதபுரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் நவாஸ் கனி அவர்களை ஆதரித்து வாக்குகளை சேகரிக்க முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் வருகை புரிந்தார்.

இந்தியா கூட்டணியின் சார்பாக அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதலமைச்சர் மேற்கொண்ட பரப்புரையில் மஜக-வின் இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சையது இபுராஹிம் தலைமையில் மாவட்ட பொருளாளர் நாகூர் மீரான், மாவட்ட துணை செயலாளர்கள் கருத்த மரைக்கா, ஆஸாத், அபுல் ஹசன், நகர செயலாளர் செய்யது அலி, MJTS தொண்டி சேக்,நகர IT WING சூரங்கோட்டை ஜாபர் கத்தார் மண்டலம் ஹக்கீம் மற்றும் நூற்றுக்கணக்கான மஜக தொண்டர்கள் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

நிகழ்வில் திரும்பும் திசையெங்கும் மஜக-வின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#இராமநாதபுரம்_தொகுதி
#MJK_IT_WING
27.03.2024