அபுதாபியில்… MKP சார்பில் நடைபெற்ற இதயங்களை இணைத்த இஃப்தார் நிகழ்வு….

மார்ச் 28,

ஐக்கிய அரபு அமீரக தலைநகர் அபுதாபியில், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) அபுதாபி மாநகர கிளையின் சார்பாக “இதயங்களை இணைக்கும் இஃப்தார் நிகழ்ச்சி” நேற்று அபுதாபி ஏர்போட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார் பாய் உணவகத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

நிகழ்வினை அபுதாபி மாநகரச் செயலாளர் சகோ. லால்பேட்டை ரைசுல் இஸ்லாம் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். முதலில் இறைவேதம் ஓதி சீர்காழி அப்துல் காதிர் அவர்கள் தொடங்கி வைக்க, அபுதாபி மாநகர துணைச் செயலாளர் மதுரை ராஜா உசேன் அவர்கள் வந்திருந்த பேராளர்களையும், மனிதநேய சொந்தங்களையும் வரவேற்றார்.

இந்நிகழ்வில் அபுதாபி மாநகர ஆலோசகர் ஆயங்குடி முஹம்மது ரியாஸ், அமீரக துணைச் செயலாளர் தோப்புத்துறை ரசூல் முஹம்மது, அமீரக ஆலோசகர் தோப்புத்துறை ஷேக் தாவூத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை செயற்குழு உறுப்பினர் அசாலி அஹமது அவர்களும், மர்ஹாபா சமூக நலப் பேரவையின் தலைமை ஒருங்கினைப்பாளர் சுஹைபுத்தின் அவர்களும், அபுதாபி மக்கள் மன்றத்தின் நிறுவனரும், அபுதாபியில் பிரசித்திப் பெற்ற சமூக ஆர்வலருமான சகோ. சிவகுமார் அவர்களும், அபுதாபியின் புகழ்பெற்ற சேவை அமைப்பான அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் மௌலவி. லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்களும், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்-ன் பொதுச்செயலாளர் சகோ. லால்பேட்டை முஹம்மது ரிலா அவர்களும் கலந்துகொண்டனர்.

சமூகங்களிடையே நல்லிணக்கம் ஏன் பேணப்பட வேண்டுமென்ற அவசியத்தை வலியுறுத்தி சகோ. சிவகுமார் அவர்களும், பொதுத் தளங்களில் மஜக ஆற்றிவரும் பணிகள் பற்றியும் அதனால் சமூகத்தில் விழையும் நல்மாறுதல்கள் பற்றி கலாநிதி. அசாலி அஹமது அவர்களும், ஒற்றுமையின் வலிமையும், அதன் அவசியத்தையும், அதனால் சமூகத்தில் நாமடையும் பெரும் பேறுகளையும் சகோ. சுஹைபுத்தின் அவர்களும் மிக்க ஆழமாக, காத்திரமாக தங்களது சிறப்புரைகளை வழங்கினார்கள்.

அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் மௌலவி. லால்பேட்டை முஹம்மது அப்பாஸ் அவர்கள் நோன்பு துறக்கும் வேளையில் இறைவனை இறைஞ்சி பிரார்த்தனை செய்தார்கள். இறுதியாக அபுதாபி மாநகர பொருளாளர் சகோ. தோப்புத்துறை ஷாஹுல் ஹமீத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்விற்கு அபுதாபி, முஸப்பா மட்டுமல்லாது அல்-அய்ன், துபாய் போன்ற மாநகரங்களில் இருந்தும் மனிதநேய கலாச்சாரப் பேரவையின் நிர்வாகிகளும், மனிதநேய சொந்தங்களும், மர்ஹபா சமூக நலப் பேரவையின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், அபுதாபி லால்பேட்டை ஜமாஅத்-ன் நிர்வாகிகளும், உறுப்பினர்களும், அய்மான் சங்கத்தின் உறுப்பினர்களும், நிர்வாகிகளும், தோப்புத்துறை மன்னனின் மைந்தர்களும் பெருந்திரளாக வந்து சிறப்பித்து இருந்தனர்.

அபுதாபி மாநகர துணைச் செயலாளர் சகோ. தோப்புத்துறை ஹக்கீம் அவர்கள் தலைமையிலான குழுவினர் மிகுந்த நேர்த்தியான முறையில் இந்நிகழ்வினை ஒருங்கிணைத்து இருந்தனர்.

காயல். சுப்ஹான் காக்கா அவர்களின் ஒளிப்படங்கள் இந்நிகழ்வினை மேலும் வண்ணமயமாக்கியது.

அபுதாபி ஜப்பார் பாய் உணவகத்தின் உரிமையாளர் பெரோஸ் அலி மற்றும் அவர்கள் ஊழியர்களின் வாஞ்சை மிக்க விருந்தோம்பலில் வந்திருந்த அனைவரும் திளைத்து தங்களது அன்பையும், வாழ்த்துகளையும்
தெரிவித்துக்கொண்டனர்.

சமூகங்களுக்கிடையே ஒற்றுமை, சகோதரத்ததுவம், வாஞ்சையுணர்வு போன்ற உயரிய கருத்துகளை வந்த்திருந்த அனைவரின் உள்ளத்திலும், சிந்தையிலுமேற்றி இந்நிகழ்வு இனிதாய் நிறைவுற்றது.

தகவல்;
#MKP_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MKP_IT_Wing
#மனிதநேய_கலாச்சார_பேரவை
#அபுதாபி_மாநகரம்
#ஐக்கிய_அரபு_அமீரகம்
27.03.2024.