ஆருயிர் மனிதநேய சொந்தங்களே.... இறையருள் சூழ இக்கடிதம் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்கிறேன். அடிக்கடி கடிதம் வழியாக உங்கள் அனைவரோடும் உரையாட வேண்டும், உறவாட வேண்டும் என மனம் விரும்பினாலும், அயராத பயணங்களும் தொடர்ச்சியான பணி சுமைகளும் அதை நிறைவேறாமலேயே தடுத்துவிடுகின்றன என்பதுதான் உண்மை. சொந்தங்களே.. நமது கட்சியை தொடங்கிய நாள் முதல் இன்றுவரை நாம் அனைவருமே ஓடியாடி உழைத்து கொண்டிருக்கின்ற காரணத்தினால் தான், ஐந்தாம் ஆண்டில் வலிமை மிக்க அரசியல் சக்தியாக உருப்பெற்றிருக்கிறோம். சற்றே திரும்பிபார்க்கின்ற போது, இவற்றையெல்லாம் நாம் எப்படி சமாளித்து கடந்து வந்தோம் என்ற ஆச்சரியங்கள் புருவங்களை உயர்த்த செய்கின்றன. அலைகடலில் போராடி, புயல் வீச்சில் புரண்டு, எதிர் நீச்சல் அடித்து, நெருப்பு வளையங்களை கடந்து நமது பயணம் சாகசங்களாக அமைந்திருக்கிறது. அரசியலின் ஆபத்தான வளைவுகளில் விழுந்து விடாமல், நமக்கான பாதைகளில் பயணித்தவாரே வெற்றிகளை குவித்துள்ளோம். அதன் விளைவாக, நமது சட்டமன்ற பணிகளை பாராட்டி மஹாராஷ்டிரா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜியின் நிர்வாக குழுமமான புனே அமைதி பல்கலைக்கழகம் "இந்தியாவின் முன்மாதிரி இளம் சட்டமன்ற உறுப்பினர்" என்ற விருதை வழங்கிய போது, அது மனிதநேய ஜனநாயக கட்சிக்கு கிடைத்த மாணிக்கம்
Tag: வாழ்வுரிமை மாநாடு
மஜகவின் வாழ்வுரிமை மாநாடு..! மேதாபட்கர் அவர்கள் வாழ்த்துச் செய்தி..!
#மனிதநேயஜனநாயககட்சி நடத்திய வாழ்வுரிமை மாநாட்டுக்கு வருகை தர விருந்த நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் , #மேதா_பட்கர் அவர்களால் வர இயலாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தன் சார்பில் மஜக பொதுச் செயலாளர் #முதமிமுன்அன்சாரி_MLA அவர்களுக்கு, அவர் அனுப்பிய மாநாட்டு ஆதரவு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது... (ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது...) சீக்கியர்கள் மீதும், தலித்துகள் மீதும், ஆதிவாசிகள் மீதும், அவர்களின் அதிகாரத்தின் மீதும் நின்று கலவரங்கள் வழியாக உயிர் காவு வாங்கிய அந்த #தீய_சக்திகள் தற்போது முஸ்லிம்கள் மீது பாய தொடங்கி இருக்கின்றனர். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து நாங்கள் களமாடி வருகின்றோம், தமிழகத்தில் அதனை எதிர்த்து கோயம்புத்தூரில் வாழ்வுரிமை மாநாடு நடத்துகின்ற மனிதநேய ஜனநாயக கட்சிக்கு #எனது_வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். குடியுரிமை உரிமை திருத்த சட்டம் என்பது அசாமில் தோல்வியை சந்தித்த ஒன்று, அதை நாடு முழுவதும் அமல்படுத்த துடிக்கின்ற பாரதிய ஜனதா அரசு நிச்சயமாக தோல்வியை சந்திக்கும். தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு இரண்டையும் ஒன்றோடு ஒன்று இணைப்பது என்பது அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. அதனை வலிமையாக எதிர்ப்போம். குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு
மஜக வாழ்வுரிமை மாநாடு படத்தொகுப்பு
கருப்புசட்டங்களுக்கு எதிரான மஜக வாழ்வுரிமை மாநாட்டு தீர்மானங்கள்…!
மாநில நிர்வாகிகள் மாநில அணி நிர்வாகிகள் மேடையில் மொழிந்தனர்..!! கோவை. மார்ச்.01., #மனிதநேயஜனநாயககட்சி-யின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் காந்திஜி திடலில் பிப்ரவரி.29 அன்று தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிராக "வாழ்வுரிமை மாநாடு" நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் வாசிக்கப்பட்டது, அவைகள் பின்வருமாறு... தீர்மானம் - 01 குடியுரிமை திருத்த கறுப்பு சட்டங்களுக்கு எதிர்ப்பு: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் குடியுரிமை திருத்த சட்டம் (CAA) என்பது மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இது இந்திய அரசியல் சாசன சட்டத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும், சர்வதேச ஒப்பந்தத்திற்கும் எதிரானது. அதுபோல் NRC, NPR போன்ற குடியுரிமை தொடர்பான சட்டங்கள் நாட்டின் பிரிவினைகளையும், பாகுபாடுகளையும் ஏற்படுத்தக்கூடியதாக இருக்கிறது. எனவே CAA சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் NPR, NRC சட்டங்களை நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனவும், இம்மாநாடு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. தீர்மானம் - 02 குடியுரிமை போராளிகளுக்கு இரங்கல்: குடியை கெடுக்கும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடெங்கிலும் நடைபெற்று வரும் அமைதி வழி ஜனநாயகப் போராட்டத்தில் தில்லி முதற்கொண்டு அரசபடைகளின்
குலுங்கியது கோவை மனித நேய ஜனநாயக கட்சி வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்!
குடியுரிமைசட்டஎதிர்ப்புபோரில்ஒருவரலாற்றுதிருப்பம்! மார்ச் 01, கோவை மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை கொடிசியா வளாகத்தில் தமிழகம் தழுவிய அளவில் குடியுரிமை கருப்பு சட்டங்களான CAA, NRC, NPR ஆகியவைகளுக்கு எதிரான "வாழ்வுரிமை மாநாடு" பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ தலைமையில் நடைப்பெற்றது. https://m.facebook.com/story.php?story_fbid=2305788299520932&id=700424783390633 இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா Ex. MP, மஜகவின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், மாமன்னர் திப்பு சுல்தானின் கொள்ளுப்பேரன் பக்தியார் அலி சாஹிப், பாதிரியார் ஜெகத் கஸ்பர், மஜக அவைத்தலைவர் நாசர் உமரி, இணைப் பொதுசெயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, அலிகார் பல்கலைகழக மாணவர் பேரவை செயலாளர் ஹுசைவா அமீர் ரஷாதி, ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக (JNU) மாணவர் பேரவை செயலாளர் சதீஷ் யாதவ், AMU மாணவர் பேரவை உறுப்பினர் கௌதம், குலிஸ்தான் பத்திரிகை ஆசிரியர் முக்தார் அஹமது, தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கு.ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாநாட்டு திடலுக்கு "காந்திஜி" அவர்களின் பெயரும், மாநாட்டு மேடைக்கு குடியுரிமை கருப்பு சட்டங்களுக்கு எதிரான டெல்லி ஷாஹின்