சென்னை.டிச.09.., மேட்டுப்பாளையத்தில் ஆதிக்க சுவர் இடிந்து விழுந்து 17-பேர் பலியான சம்பவத்திற்கு நீதி கேட்டும், அதற்காக போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரியும், பெரியாரிய-தமிழின உணர்வாளர்கள் சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. ஐயா.நல்லக்கண்ணு அவர்கள் தலைமையில் நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில், திராவிட விடுதலை கழகம் சார்பில் கொளத்தூர் மணி, மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, மே-17 இயக்கம் சார்பில் திருமுருகன் காந்தி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் கு.ராமகிருஷ்ணன், மதிமுக சார்பில் மல்லை சத்யா, விசிக சார்பில் ஷாநவாஸ், விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் குடந்தை அரசன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் கண்டன உரையாற்றினர். சுவர் உரிமையாளர் மீது கொலை வழக்குகள் பதிய வேண்டும், நீதி கேட்டு போராடிய நாகை.திருவள்ளுவன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும், அராஜகம் செய்த ஈரோடு Sp, மேட்டுப்பாளையம் DSP, மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மீது தீண்டாமை சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள்
Tag: மேட்டுப்பாளையத்தில் கட்டிட விவகாரம்
மேட்டுப்பாளையத்தில் போலீஸ் தடியடி..! மஜக பொதுச்செயலாளர் முதமிமுன்அன்சாரி MLA கண்டனம்
மழையினால் மேட்டுப்பாளையத்தில் தனியார் கட்டிடம் இடிந்து விழுந்து இதுவரை 17-பேர் இறந்துள்ளதாக வந்திருக்கும் செய்தி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த நிலையில் ஒரு கட்டிடம் இடிந்து விழும் அளவிற்கு இருந்ததற்கு அதன் உரிமையாளரே பொறுப்பாவார். அந்த வகையில் அந்த கட்டிட உரிமையாளரை கைது செய்யப்பட வேண்டும் என பொதுமக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பல்வேறு கட்சியினர், சமூக அமைப்பினரும் அடங்குவர். அவர்களின் கோரிக்கை நியாயமானது. 17 பேரின் உயிரை பறிகொடுத்த நிலையில், அவர்கள் கொந்தளிப்பது இயல்பானது. இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை சமாதானப்படுத்தி, உரிய அவகாசம் கேட்டு, அவர்களை கலைந்து செல்ல உரிய வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களை காவல்துறை அணுகிய விதம் நாகரீகமற்றதாக இருக்கிறது. எட்டி உதைப்பது, கன்னத்தில் அறைவது தொடங்கி, அந்த ஏழை மக்களின் மீது கடும் தடியடிகளையும் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஏழைகள், உழைப்பாளிகள், தங்கள் உறவுகளை பறிகொடுத்து , துயரத்தில் துடிக்கும் போது அவர்களை இப்படித்தான் அணுகுவதா? காவல் துறையின் இத்தகைய போக்குகளை தமிழக அரசு அனுமதிக்க கூடாது என மஜக-வின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம். சூழ்நிலையை