ஜன.29., திண்டுக்கல் மாவட்டம் புதுஆயக்குடியில் சமூக நீதிக்காவலர் அல்ஹாஜ் பழனிபாபா அவர்களின் 23ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் KM.ஷெரீப், அவர்கள் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவரது உரையிலிருந்து முக்கிய பகுதிகள் பின்வருமாறு:- https://m.facebook.com/story.php?story_fbid=2244556205644142&id=700424783390633 நான் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றுவதற்கு முன்பாக உரை தயாரிப்பு குறித்து கவனம் செலுத்துவேன் ஆனால் இந்நிகழ்ச்சிக்கு வரும்போது, பணி பளு காரணமாக உரை தயாரிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. இதை காரில் வரும்போது மஜக நிர்வாகிகளிடம் கூறினேன். நான் அது பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில், பாபா அவர்கள் நம் உணர்வில் கலந்திருக்கிறார், உள்ளத்தில் பதிந்திருக்கிறார்.அவர் பிறந்த ; அவர் விதைக்கப்பட்ட ஊரில், வரும்போதே ஒரு சிலிர்ப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை. 1993ஆம் ஆண்டு அகில இந்திய ஜிஹாத் கமிட்டி சார்பில் மயிலாடுதுறையில் பிரம்மாண்டமான மாநாடு நடந்தது. அதில் கூரை நாடு முதல் மயிலாடுதுறை பூங்கா நகரம் வரை பேரணி நடந்தது. பேரணியை டாக்டர்.ராமதாஸ், டாக்டர்.பழனிபாபா, டாக்டர்.சேப்பன், ஆகியோர் பார்வையிட்டனர். நாங்கள் வாகனங்களில் அணிவகுத்து சென்றோம். அப்போதுதான் பாபாவை முதன் முதலில்
You are here
Home > Posts tagged "பழனிபாபா"