இன்று நாடாளுமன்றத்தில் தேசிய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது. பாகிஸ்தான்,பங்களாதேஷ், ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வந்த அகதிகள் 5 ஆண்டுகள் தங்கியிருந்தால்,உரிய மூல ஆவணங்கள் இல்லாவிடினும்,அவர்கள் இந்திய குடியுரிமை பெறலாம் என புதிய சட்டம் கூறுகிறது. இதில் இந்து, பெளத்தர், சீக்கியர், ஜைன, கிரித்தவர் உள்ளிட்டோர் அடங்குவர் என கூறியிருப்பதில் மாற்று கருத்துகள் இல்லை. ஆனால் இதில் முஸ்லிம்களையும், இலங்கை தமிழர்களையும் சேர்க்காதது ஏன்? என்ற கேள்வி வலிமையாக எழுகிறது. பங்களாதேஷ் சுதந்திர நாடாக உருவானபோது அங்கு சென்ற வங்கம், அஸ்ஸாமி, பீகாரி, ஒரிய மொழி பேசும் முஸ்லிம்கள் மீண்டும் தங்கள் தாய் நாடு திரும்பினர். இப்போது அவர்களின் நிலை என்ன? அவர்கள் இந்திய முஸ்லிம்களாக பிறந்தது தான் குற்றமா? என்ற கேள்விகள் முக்கியமானவை. அது போல் இலங்கை தமிழர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக மண்ணில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்கள் இந்திய குடியுரிமை கேட்டு வரும் போது, அவர்களும் புறக்கணிக்கப்பட்டிருப்பது யாரை திருப்திப்படுத்த? என கேட்கின்றோம். அமெரிக்கா போன்ற நாடுகளை பகைக்க கூடாது என்பதற்காக கிரித்தவர்களை அப்பட்டியலில்
You are here
Home > Posts tagged "அப்துல் கலாம்"