ஏப்.20., இன்று மாலை வேதாரணியம் தொகுதி அதிமுக இணைச்செயலாளர் மீரா.ஷேக் மெய்தீன் அவர்கள் நாகை சட்டமன்ற தொகுதி மஜக வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரியை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் . இந்நிகழ்வின் போது அமைச்சர் ஜெயபால் மற்றும் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
நாகப்பட்டிணம்
நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை…
ஏப்.20., இன்று நாகை சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வெய்யிலிலும் அதிமுக நிர்வாகிகள் தலைமையில் இரட்டை இலைக்கு ஒட்டு வேட்டை நடத்தினார் நாகை சட்டமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி. இதில் பொதுமக்களும் இளைஞர்களும் திரளாக வரவேற்று மகிழ்ந்தனர். உடன் மஜக மாநில,மாவட்ட,ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள் மற்றும் அ.இ.அ.தி.மு.க (கூட்டணி கட்சி) நிர்வாகிகள் இருந்தனர். நமது சின்னம் இரட்டை இலை!!! மீனவர்களின் சின்னம் இரட்டை இலை!!! ஏழைகளின் சின்னம் இரட்டை இலை!!! வாக்களிப்பீர்!! இரட்டை இலைக்கு!!! தகவல் : மஜக ஊடகப்பிரிவு #votefor_ansari_nagai
நாகையில் அதிமுக(கூட்டணி) கட்சியின் நிர்வாகிகள் மஜக வேட்பாளருடன் சந்திப்பு.
ஏப்.20.,அதிமுக நாகை மாவட்ட செயலாளரும், வேதை சட்டமன்ற தொகுதியுடைய வேட்பாளருமான O.S.மணியன் அவர்களும், முன்னால் அமைச்சரும் நாகை மாவட்ட அதிமுக அவைத்தலைவருமான ஜீவானந்தம் அவர்களும், அதிமுக நகர செயலாளர் சந்திரமோகன் ஆகியோர் மஜக பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான M.தமிமுன் அன்சாரி அவர்களை இன்று மதியம் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு
நாகை தொகுதியில் ஒரே நாளில் 25 கிராமங்களில் பரப்புரை !!
ஏப்.19., இன்று நாகப்பட்டினம் தொகுதியில் அஇஅதிமுக கூட்டணியின் மனித நேய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் M. தமிமுன் அன்சாரி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஒரே நாளில் 25 கிராமங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஒரே நாளில் அதிரடியாக மஐகவினர் திருமருகல் ஒன்றியத்தில் மட்டும் 25 கிராமங்களுக்கு சென்று சுறுசுறுப்பாக தேர்தல் பணியாற்றியதை பார்த்த அதிமுக தோழர்கள் ,ஒரு பெரிய அரசியல் கட்சிக்கு இணையாக பணிபுரிகிறீர்களே என பாராட்டினார்கள். செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்கள் வேட்பாளர் தமிமுன் அன்சாரிக்கு வரவேற்பு கொடுத்ததோடு ஒரு துடிப்பான இளைஞர் வேட்பாளராக வலம் வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்கள். கோவில்கள் பள்ளிவாசல்களில் அங்குள்ள நிர்வாகங்களின் சார்பில் சால்வை அணிவித்து வரவேற்பு வழங்கப்பட்டது. எல்லா இடங்களிலும் தமீமுன் அன்சாரியின் அணுகுமுறைகள் குறித்து நல்ல அபிப்ராயம் உருவாகி வருவது குறிப்பிடதக்கது. தகவல் : மஜக ஊடகப் பிரிவு