#காவல்துறையுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் பணியில் மஜக_வினர்!! கோவை:ஏப்.16., கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கோவை குறிச்சி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் காவல்துறையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இணைந்து மக்கள் கூட்டத்தை அரசு அறிவுறுத்திய சமூக விலகல் படி ஒழுங்குபடுத்தி சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவைமாநகர்மாவட்டம் 16.04.2020
Tag: மனிதநேய ஜனநாயக கட்சி
வேலூரில் மஸாஜித் அசோசியேஷன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மஜகநிர்வாகிகள்பங்கேற்பு...! வேலூர்.டிச.22.., வேலூரில் மஸாஜித் அசோஸியேஷன் மற்றும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வெள்ளிக்கிழமை (20/12/2019) மாலை 3-மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டம் மஸாஜித் அசோஸியேஷன் தலைவர் ஹாஜி அப்துல் அலீம் சாஹிப் அவர்கள் தலைமையில் ஹஜ்ரத் மௌலானா ஷைபுதீன் ரஷாதி, எழுத்தாளர் தோழர் வே.மதிமாறன், வேலூர் பிலிப் ஆகியோர் கண்டன உரை வழங்கினர். போராட்டத்தில் கண்டன உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அப்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் அனைவரும் ஒதுங்கி ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்தித் தந்தனர், இந்த செயல் அந்தப்பகுதியில் உள்ள அனைவரையும் நெகிழ செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முஹம்மத் யாஸீன் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினார். இதில் மஜக வேலூர் மாவட்ட, மண்டல, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கண்டன ஆர்பாட்டத்தில் வேலூர் அனைத்து முஹல்லா ஜமாத்தார்கள், அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள், கட்சிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். தகவல், #மஜகதகவல்தெழில்நுட்பஅணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம். 20-12-2019