கோவையில் சுகாதாரத்துறை சார்பில் வடமாநில தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை!

#காவல்துறையுடன் இணைந்து ஒழுங்குபடுத்தும் பணியில் மஜக_வினர்!!

கோவை:ஏப்.16.,

கோவையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கோவை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து சுகாதாரத்துறை சார்பில் கோவை குறிச்சி பகுதியில் சுமார் 400க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் காவல்துறையுடன் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் இணைந்து மக்கள் கூட்டத்தை அரசு அறிவுறுத்திய சமூக விலகல் படி ஒழுங்குபடுத்தி சுகாதாரத்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்தனர்.

தகவல்

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#கோவைமாநகர்மாவட்டம்
16.04.2020

Top