மதுரை.ஜன.09,, மனிதநேய ஜனநாயகக் கட்சி மதுரை தெற்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மதுரை ஹவுஸிங் போர்டு வில்லாபுரத்தில் மஜக மாநில ஒருங்கினைப்பாளர் மௌலா நாசர் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மஜக துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லசாமி, மாநில துணைச் செயலாளார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் முஹம்மது சைஃபுல்லா, ஆகியோர் கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து ஆலோசனை வழங்கினார்கள். இந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மொய்தீன், மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் ஆதில்பாஷா மற்றும் மாவட்ட துணை செயலாளர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் :: #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING, #மஜக_மதுரை_தெற்கு_மாவட்டம்.
தமிழகம்
தமிழகம்
ஈரோடு கிழக்கு மாவட்ட நிர்வாக ஆலோசனை கூட்டம்..
ஈரோடு.ஜன.09., மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை நேற்றைய தினம் ஈரோடு கிழக்கு மாவட்டத்திற்கு பொறுப்புக்குழுவை நியமித்து அறிவித்திருந்தன. இந்நிலையில் இன்று 08-01-2018 மாவட்ட பொறுப்புக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் குழு தலைவர் ஈரோடு எக்சான் தலைமையில் நடைபெற்றது. மாநில துனைச்செயலாளர் A.பாபு ஷாஹின்ஷா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினார். பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஸ்டீல் நிஜாம், மார்க்கெட் நாசர் மற்றும் திலீப் குமார், யாஸர் அராபத், ரியாஸ் காதர் உசேன், ஜெ.சிராஜ், ஜாபர் சாதிக், குளம் ஜாகிர், ஸ்டீபன் ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு முதல்கட்டமாக அணிகளுக்கான மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய தலைமைக்கு பரிந்துரைசெய்ய முடிவு செய்யப்பட்டது. விரைவில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிளைகளை கட்டமைப்பது உள்ளிட்ட பல்வேறு முடிவுகளும் எடுக்கப்பட்டன. தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_ஈரோடு_கிழக்கு_மாவட்டம்.
கோவையில் மஜகவின் முயற்சியில் தமிழக அரசின் ₹6 இலட்சம் நிவாரண நிதி..! மஜக நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவித்த தம்பதியர்..!!
கோவை.ஜன.08., கோவை ஜி.எம். நகர் பகுதியில் கடந்த 07.06.17 அன்று மின்சாரம் தாக்கி சாஹிதா பானு, சல்மான், என்ற இரு குழந்தைகள் மரணமடைந்தனர். அதை தொடர்ந்து மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது, துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர், மாநில துணை செயலாளர் அப்துல் பஷீர், மற்றும் மஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் உயிரிழந்த குழந்தைகள் வீட்டிற்கு சென்று அவர்கள் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். அதை தொடர்ந்து உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கவேண்டும் என தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிச்சாமி, அவர்களுக்கு மஜக சார்பில் கோரிக்கை வைத்தனர். அதனடிப்படையில் நேற்று 07.01.18 கோவை செல்வபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் SP.வேலுமணி, அவர்கள் அக்குடும்பத்தாருக்கு 6 லட்சரூபாய் நிவாரண நிதிக்கான காசோலை வழங்கினார். அதை தொடர்ந்து இன்று மஜக அலுவலகம் வந்த அக்குடும்பத்தார் மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ATR.பதுருதீன், மாவட்ட துணைசெயலாளர் TMS.அப்பாஸ், வணிகர்சங்க மாவட்ட செயலாளர் அக்பர், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சம்சுதீன் ஆகியோரை சந்தித்து நிவாரண நிதியை பெற்று தந்ததற்காக மஜக தலைமை
மஜகவில் இணைந்த திண்டுக்கல் மாவட்ட இளைஞர்கள்..!
திண்டுக்கல்.ஜன.08., கடந்த 05.01.2018 அன்று திண்டுக்கல் வருகைதந்த மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் முன்னிலையில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மஜக தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் கோட்டை ஹாரிஸ், திண்டுக்கல் மாவட்ட பொறுப்பு குழு தலைவர் A.ஹபிபுல்லா, பொறுப்பு குழு உறுப்பினர்கள் A.அப்துல் காதர் ஜெய்லானி, S.சரவணன், R.உமர் அலி, M.அனஸ் முஸ்தபா மற்றும் திண்டுக்கல், பழனி, வேடசந்தூர், வடமதுரை பிலாத்து, திண்டுக்கல் 16வது வார்டு ரவுண்ரோடு கிளை நிர்வாகிகள் அனைவரும் உடனிருந்தனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திண்டுக்கல்_மாவட்டம். 06.01.2018
திருச்சியில் திரளானோர் மஜகவில் இணைந்தனர்..!
திருச்சி.ஜன.08.,திருச்சியில் நேற்று(07.01.2018) பல்வேறு கட்சியினரும், அமைப்பினரும் மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக) பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA முன்னிலையில் மஜகவில் இணைந்தனர். இந்நிகழ்வில் மஜக மாநில பொருளாளர் S.S.ஹாரூன் ரஷீத், தலைமை ஒருங்கிணைப்பாளர் மௌலா.நாசர், அவைத்தலைவர் நாசர் உமரி, தலைமை நிர்வாககுழு உறுப்பினர் AS.அலாவுதீன், துணை பொதுச்செயலாளர் மன்னை செல்லச்சாமி, மாநில செயலாளர்கள் NA.தைமியா, H.ராசுதீன், நாச்சிகுளம் தாஜுதீன், மாநில துணைச் செயலாளர் புளியங்குடி செய்யது அலி, சீனி முகம்மது,ஆகிய மாநில நிர்வாகிகள் இருந்தனர். மாவட்ட நிர்வாகிகளான திருச்சி மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஷேக்தாவூத், இளைஞர் அணி சதாம் ஆகியோர் உடனிருந்தனர். இதில் ஏராளமான இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #மஜக_திருச்சி_மாவட்டம். 07.01.2018.