இந்திய மதச்சார்பின்மையை கேள்விக்குறியாக்கும் புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும். இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும். கோவை மாநகர் மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் MH.அப்பாஸ், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் துணை பொதுச் செயலாளர் கோவை சுல்தான் அமீர், அவர்கள் கண்டன உரையாற்றினார். அவர் உரையாற்றும் போது1955ல் இருந்து நடைமுறையில் இருக்கக்கூடிய சட்டத்தை பொருளாதார தோல்விகளை மறைப்பதற்காகவும் மதச்சாற்பற்ற அரசு என்று உலகம் முழுவதும் பாராட்டப்படக்கூடிய இந்திய தேசத்தை காவி தேசம் என்று அறிவிக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துடன் கொண்டு வரப்பட்ட புதிய குடியுரிமை சட்டத்தை வன்மையாக கண்டிக்கிறோம் இந்த சட்டத்திருத்தத்தில் நேபாளத்தில் பாதிப்புக்குள்ளான கிறிஸ்துவர்களையும், ஈழத்தமிழர்ளையும், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மர், நாட்டின் இஸ்லாமியர்களையும் இன, மொழி, மதரீதியாக பாதிக்கப்படக்கூடிய அனைத்து மக்களையும் உள்ளடக்கிய சட்டதிருத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று பேசினார். இதில் மாநில கொள்கை விளக்க அணி செயலளர் கோவை நாசர், அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை செயலாளர் கோவை அப்துல்பஷீர், தொழிற்சங்க மாநில செயலாளர் கோவை MH.ஜாபர்அலி, தகவல் தொழில்நுட்ப அணி
Tag: புதிய குடியுரிமை சட்ட திருத்தம்
நாகையில் புதியகுடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டநகல் கிழிப்புபோராட்டம் – மஜகவினர்_கைது!
டிச.15, மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை தெற்கு மாவட்டத்தின் சார்பில் இன்று நாகூர் புதிய பேருந்து நிலையத்தில் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கெதிராக சட்ட நகலை கிழித்தெறியும் போராட்டம் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடைப்பெற்றது. மஜக மாநில துணை செயலாளர் நாகை முபாரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். மாநில தகவல் தொழில்நுட்ப அணி பொருளாளர் A.H.M ஹமீது ஜெகபர், தலைமை செயற்குழு உறுப்பினர் அ.ஷேக் மன்சூர் முன்னிலை வகித்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவல்துறை கெடுபிடிகளை மீறி குடியுரிமை சட்ட நகலை கிழித்தெறிந்தனர். இதில், மாவட்ட துணை செயலாளர்கள் முன்ஸி யூசுப்தீன், கண்ணுவாப்பா @ சாகுல் ஹமீது, சேக் அகமதுல்லாஹ், சபுருதீன், மு.மாவட்ட நிர்வாகி திருப்பூண்டி சாகுல் ஹமீது, மாவட்ட அணி நிர்வாகிகள் தெத்தி ஆரிப், சுல்தான், கீழையூர் ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, நகர செயலாளர்கள் அஜீஜுர் ரஹ்மான், அபுசாலி சாஹிப், திட்டச்சேரி பேரூர் கழக செயலாளர் இபுராஹீம், ஷேக்பரீத், திருப்பூண்டி இப்ராஹீம், அஜீஸ், ஜாசிம், பொருள்வை ஜலால், மஞ்சை சதாம், வவ்வாலடி அன்சாரி, தோப்புத்துறை முபீன், அல்தாப், நிசாத், நாகூர் சாகுல் ஹமீது, ஷேக்அலி, கலிமுல்லாஹ், அப்துல் காதர், செமிருதீன்,
புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரி கோவை வடக்கு மாவட்ட மஜகஆர்ப்பாட்டம்!!
டிச 14., மத்திய அரசு தற்போது பாரபட்சத்துடன் நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. பொதுமக்களும் கல்லூரி மாணவர்களும் தன்னெழுச்சியாக போராட தொடங்கியுள்ளனர். டெல்லி அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் கடும் புரட்சி வெடித்துள்ளது. இந்திய மதச்சார்பின்மைக்கு வேட்டு வைக்கும் இந்த சட்டத்திருத்தத்தை திரும்ப பெறக்கோரியும். இந்திய வம்சாவளி முஸ்லிம்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்கக் கோரியும். கோவை வடக்கு மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் R.முஹம்மது அப்பாஸ், அவர்கள் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட பொருளாளர் ரபிதீன், தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமைதீன், மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் அராபத், உமர்பாருக், பாரி, கோகுல், மற்றும் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #கோவை_வடக்கு_மாவட்டம் 14.12.19
திண்டுக்கல்லில் புதிய குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து மஜக சார்பில் ஆர்ப்பாட்டம்!!
திண்டுக்கல்:டிச.13., மத்திய அரசு பாரபட்சத்துடன் நிறைவேற்றிய புதிய குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திண்டுக்கல் பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் அருகே கொள்கை விளக்க அணி மாநில துணை செயலாளர் பழனி சாந்துமுகம்மது, அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன மேலும் சட்ட நகலை கிழிக்க முற்பட்டபோது காவல் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதில் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் பிலாத் பாட்ஷா(எ) அப்துல் காதர் ஜெய்லானி, சர்புதீன், சோட்டா(எ) சேக்பரீத்,முகமது,உள்ளிட்ட திரளான மஜக நிர்வாகிகளும் மற்றும் ஜமாத்தார்களும் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #திண்டுக்கல்_மாவட்டம்