இன்று பிப்.29, கோவையில் நடைபெறும் மஜகவின் வாழ்வுரிமை மாநாடு பன்முகத்தன்மையை உள்ளடக்கியதாக இருக்கிறது. மாநாடு நடைபெறும் கொடிசியா திடலுக்கு காந்திஜி அவர்களின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. டெல்லி ஷாஹின் பாக்கில் குடியுரிமை எதிர்ப்பு போராட்ட களத்தில் கடும் குளிரில் உயிர் துறந்த குழந்தை ஜஹானாராவின் பெயர் மாநாட்டு மேடைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. சச்சார் கமிட்டியின் தலைவராக இருந்து இந்திய முஸ்லிம்களின் வாழ்க்கை தரத்தை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த நீதியரசர் சச்சார் அவர்களின் பெயர் பிரதான நுழைவாயிலுக்கும், சங்பரிவார் ஆதரவு பயங்கரவாத சூழ்ச்சிக்கு பலியான மராட்டிய DGP மாவீரன் ஹேமந்த் கர்கரேவின் பெயர் மற்றொரு நுழைவாயிலுக்கும் சூட்டப்பட்டிருக்கிறது. பெண்கள் நுழைவாயிலுக்கு, ஃபாஸிஸ்ட்டுகளால் காஷ்மீரில் கற்பழித்து கொல்லப்பட்ட சிறுமி ஆசிபா வின் பெயரும், கண்காட்சி பகுதிக்கு ரோஹித் வெமுலாவின் பெயரும் வைக்கப்பட்டுள்ளது. அது போல் சங்பரிவார் பயங்கரவாதத்திற்கு பலியான பிரபல முற்போக்கு எழுத்தாளர் கெளரி லங்கேஷ் அவர்களின் பெயர் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டிருக்கிறது. காலம் சென்ற கோவை மஜக வின் நிர்வாகி ஜெமிஷா அவர்களின் பெயரும் ஒரு வரவேற்பு வளைவுக்கு சூட்டப்பட்டு மரியாதை செய்யப்பட்டிருக்கிறது. வாழ்வுரிமை மாநாட்டில் தலைவர்களையும், தியாகிகளையும் மஜக சிறப்பு செய்திருக்கிறது. இது மஜகவின் முற்போக்கு அணுகுமுறைகளையும், பன்முக அரசியல் பார்வைகளையும்
Tag: வாழ்வுரிமை மாநாடு
மஜகவின் வாழ்வுரிமை மாநாட்டுப் பணிகளில் கடும் உழைப்பைக் கொடுத்த MJTS தொண்டர்கள்!
பிப்ரவரி 29 மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கருப்பு சட்டங்களுக்கு எதிராக கோவையில் வாழ்வுரிமை மாநாட்டில்,.மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கத்தின் (MJTS) பணிகள் மகத்தானது. கோவையில் "புதியபாதை" என்ற பெயரில் ஏறத்தாழ 250 மீட்டர் ஆட்டோக்கள் மனிதநேய தொழிற்சங்கத்தின் சார்பாக இயங்கி வருகிறது. மாநாடு அறிவிக்கப்பட்ட மறுநாளே சுமார் 200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களில் மாநாட்டின் விளம்பர ப்ளக்ஸ்கள் பொருத்தி கோவை மாநகர் முழுவதும் வலம் வந்தனர். மாநாட்டின் துண்டு பிரசுரங்களை தொடர்ந்து கோவை மாநகர் முழுவதும் வினியோகித்து மக்கள் மத்தியில் மாநாட்டின் செய்திகளை கொண்டு சேர்த்தனர். அதுமட்டுமில்லாமல் வித்தியாசமாக புதிய பாதை தகவல் மையத்திற்கு ஆட்டோ புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களிடமும் அலைபேசியிலேயே மஜக வின் மகளிர் அணியினர் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்ததை அனைத்து மக்களும் பாராட்டினர். மாநகர் பகுதியில் வாகன நெரிசலில் சிக்கி மாநாட்டு திடலை அடைய முடியாத பல மக்களை, உடனுக்குடன் சென்று அழைத்துக்கொண்டு மாநாட்டுத் திடலை நோக்கி விரைந்து வந்தனர் . MJTS மூலம் நூற்றுக்கணக்கான ஆட்டோக்களில் மாநகர மக்கள் திடலுக்கு அழைத்து வரும் இப்பணிகளில் தொழிற்சங்கத்தினர் சிறப்பாக ஈடுபட்டனர்.. மேலும் மனிதநேய தொழிற்சங்கத்தினர் இளைஞர் அணியின் தேவையை கருதி,