விண்மீன்களா! வஞ்சிரமீன்களா! சட்டமன்றத்தில் மஜக பொதுச்செயலாளர் உரை.

ஆக,25.,நேற்று 24-8-2016 சட்டமன்றத்தில் மாண்புமிகு தமிழக முதலவர் அவர்கள் 110 விதியின் கீழ் மீன்வளத்துறை மற்றும் இளைஞர் விளையாட்டு நலன் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள் தொடர்பாக மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA பேசினார்.

தமிழகத்தில் 13 கடலோர மாவட்டங்களில்
1076 கி.மீட்டர் நீளம் முழுதும், 608 மீனவ கிராமங்களில் வாழும், மீனவ மக்கள் மனம் குளிரும் வகையில் இந்த அறிவிப்புகள் உள்ளன.

2016-17 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மீன்வள மேம்பாட்டிற்கான தொகையை 743.79 கோடியாக உயர்த்தி சாதனை அறிவிப்பினை வெளியிட்டார்கள்.

மாண்புமிகு முதல்வர் அவர்கள், மீன்பிடி இறங்குத் தளங்கள், மீன்பிடி துறைமுகங்கள், தூண்டில் வலைகள், மீன் பதப்படுத்தும் கிடங்குகள், என அறிவிப்பு செய்து அதனை நடைமுறைப்படுத்தி மீனவர்களின் இதயங்களை வென்று இருக்கிறார்கள்.

டி.ராஜேந்தர் பாடலில் ஒரு கவிதை உண்டு, “தண்ணீரில் மீன் அழுதால், கண்ணீரைத்தான் யார் அறிவார்” என்று எழுதி இருப்பார். அதை போல மீனவர்களின் துயரங்களை அறிந்து அதை போக்கும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டு இருக்கிறார்கள்.

“அவர்களது அறிவிப்புகள்
எட்டிப்பிடிக்க முடியாத
விண்மீன்கள் அல்ல..
எல்லோருக்கும் கிடைக்கும்
வஞ்சிர மீன்கள்..”

இவ்வாறு தமிமுன் அன்சாரி MLA பேசியதும் முதலவர் உட்பட அனைவரும் மேஜையை தட்டி ரசித்தனர். தொடர்ந்து விளையாட்டு நலன் குறித்த அறிவிப்புகளை வரவேற்று பேசினார்.

இன்று ஒலிம்பிக் போட்டியில், உலகிலேயே இரண்டாவது மக்கள் தொகை கொண்ட நாடு நம் நாடு, ஒரு வெள்ளி ஒரு வெண்கலப் பதக்கத்தை மட்டுமே பெற்று இருக்கிறது. நம்மை விட பரப்பளவில், மக்கள் தொகையில் குறைந்த நாடுகள் கூட தங்க பதக்கங்களை வென்று இருக்கிறார்கள்.

சீனா தனது பிள்ளைகளை தொலைநோக்கோடு பயிற்சி கொடுத்து உருவாக்கிறது. நமது நாட்டில் அது இல்லை. அதனை போக்கும் விதத்தில் தமிழ்நாட்டு பிள்ளைகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க செய்யும் வகையில் செய்யப்பட்டு இருக்கும் அறிவிப்புகள் சிறப்பானவை. இதன் மூலம் நம் தமிழ்நாட்டிற்கும், தாய்நாட்டிற்கும் அவர்கள் பெருமை சேர்ப்பார்கள்.

இவ்வாறு மஜக பொதுச்செயலாளர் எம்.தமிமுன் அன்சாரி MLA சட்டமன்றத்தில் பேசினார். அவரது உரை இன்று ஊடகங்களில் முதன்மைப்படுத்தப்பட்டு  இருக்கிறது குறிப்பிடத்தக்கவை.

தகவல்;

நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்
24_08_16