மஜக ரயில் மறியலில் உணர்ச்சி மிகு நிகழ்வுகள்..

image

image

image

* இன்று சென்னையில் மஜக நடத்திய ரயில் மறியலில் மஜகவின் அழைப்பை ஏற்று பல்வேறு சமூக பிரதிநிதிகளும் கலந்துக் கொண்டு ஆதரவு தெரிவித்தது, காஷ்மீரிகளுக்கான ஆதரவு களத்தை கூர்தீட்டியது.           

* 4.30 மணிக்கு 500 பேர் கூடியதும் காவல்துறை நெருக்கடி கொடுத்து, 5 மணிக்குத்தான் போராட்டத்தை தொடங்குவோம் என கூறியதும் காவல்துறை ஏற்கவில்லை. பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்கியதும் கூட்டம் ஆர்ப்பரித்தது. வேன்களில் மக்கள் வரிசையாக திரளத் தொடங்கியதும் எழும்பூர் முழுக்க போக்குவரத்து நிறுத்தப்பட்டது.                       

* போக்குவரத்து ஸ்தம்பித்ததும், வீதிகளில் மஜகவினர் கொடிகளுடன் ஆவேசம் பொங்க முழக்கங்களை எழுப்பி ரயில் நிலையத்தை நோக்கி ஒடினர். காவல்துறை 2 அடுக்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்து தைமிய்யா தலைமையில் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து முன்னேறி, குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.                               

* மாநில செயலாளர் சாதிக்பாஷா, துணைச் செயலாளர் புதுமடம் அனீஸ் ஆகியோர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, கைதுக்கு தயாராகினர். மாநில அணி நிர்வாகிகள் ஷமீம், பல்லாவரம் ஷபி மற்றும் சென்னை, காஞ்சி,திருவள்ளூர், மாவட்ட நிர்வாகிகள் போக்குவரத்து ஒழுங்குப்படுத்தினர்.               

* தனியரசு MLA அவர்கள் பேட்டி முடிந்ததும், கூட்டம் அலை மோதியதால், போக்குவரத்து நெரிசலில் சிக்கி அமீர் ஹம்சா (SDPI), MGK நிஜாமுதீன் (தேசியலீக்) உமர் பாரூக் (மறுமலர்ச்சி முஸ்லிம்லீக்) முனீர் (INTJ) நோ.அ.மார்க்ஸ், டைரக்டர் கெளதமன்,மே17 பிரவீன் குமார் உள்ளிட்டோர் தாமதமாக வந்து சேர்ந்தனர்.  

* தொடர்ந்து 1/2 மணி நேரத்திற்கு மேலாக கைதுகள் நடைபெற்றது. ரயிலை மறித்தவர்களையும் காவல்துறை கைது செய்தது.                                   

* 5 1/2 மணிக்கு பிறகு தாமதமாக போராட்டத்திற்கு வந்தவர்கள் எங்கு போவது எனத் தெரியாமல் வீரன் அழகு முத்துக்கோன் சிலை அருகே நின்றுள்ளனர். காவல்துறை போராட்டம் முடிந்துவிட்டது எனக் கூறி கலைந்துப் போக சொல்லியுள்ளது.                    

* காவல்துறை 500 பேருக்குள்ள சிறிய மண்டபத்தை ஏற்பாடு செய்திருந்தது. கூட்டம் கட்டுமீறியதால் கைதான அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாமல் காவல்துறை வெளியே போக சொல்லிவிட்டது.        

* உள்ளே புழுக்கமான சூழலில் தலைவர்கள் ஒருவர் பின் ஒருவராக சூடான உரைகளை நிகழ்த்த அரங்கம் அதிர்ந்தது. மக்கள் உரத்து முழுக்க மிட்டனர்.     

* காஷ்மீர் மக்களின் போராட்டம்; தேசிய இனத்தின் போராட்டம்”

“உரிமை கேட்கும் உறவுகளை; தோட்டாக்களால் அடக்காதே”

“வெடித்து கிளம்பும் உணர்வுகளை; துப்பாக்கி முனையில் ஒடுக்காதே”

“துடிக்கும் குழந்தைகளின் ரத்தத்தில்; தேசபக்தி பேசாதே” என்ற முழக்கங்கள் மக்களை சூடேற்றின.                              

* மஜகவின் ரயில் மறியல் போராட்டத்தை பதிவு செய்ய 50க்கும் மேற்பட்ட ஊடகங்கள் குவிந்தன. இது ஊடகத்திற்கு மத்தியில் இருக்கும் மஜகவின் செல்வாக்கை காட்டியது. பல தொலைக்காட்சிகள் ‘LIVE’ காட்டியது குறிப்பிடத்தக்கது.                   

* 3 நாட்களில் காஷ்மீர் மக்களுக்காக பெரும் எழுச்சியோடு போராட்டத்தை மஜக நடத்தியுள்ளதாக ஊடக நண்பர்கள் பாராட்டினர்.         

* முகநூல் வழியாக ஏராளமானோர் ‘LIVE’ நேரலை ஒளிப்பரப்பியதால் உலகம் முழுக்க இப்போராட்டத்தை பலர் கண்டு உணர்ச்சிக் கொண்டனர்.                            

* மஜக நடத்திய முதல் போராட்டக் களம் இறையருளால் பெரும் வலிமையாக வெற்றிப் பெற்றிருக்கிறது.                     

* காஷ்மீர் மக்களுக்காக தமிழகத்தில் நடைபெற்ற வீரியமிக்க முதல் போராட்ட களம் இதுதான் என உளவுத்துறை அதிகாரி ஒருவர் வியப்புடன் கூறினார்.                                   

தகவல் தொகுப்பு ; மஜக ஊடகப்பிரிவு