சென்னையில் தடையை உடைத்து மஜகவினர் ரயில் நிலையத்தில் நுழைந்தனர்…

image

image

இன்று மஜக சார்பில் காஷ்மீரில் நடைபெறும் மனிதஉரிமை மீறல்களை கண்டித்து இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை எக்மோர் ரயில் நிலையம் அருகில் குழுமினர்.

பெரும் திரளானோர் கூடிய நிலையில், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி அவர்கள் தலைமையில் மக்கள் முழக்கங்களை எழுப்பினர்.

தமிழக கொங்கு இளைஞர் பேரவை சார்பில் தனியரசு MLA, SDPI சார்பில் அமீர் ஹம்சா, INTJ சார்பில் முனீர், மறுமலர்ச்சி முஸ்லீம் லீக் சார்பில் தலைவர் அ.ச. உமர் பாரூக், இந்திய தேசிய லீக் சார்பில் தேசிய பொதுச்செயலாளர் நிஜாமுதீன், பேரா. அ. மார்க்ஸ், இயக்குனர் கெளதமன், மே 17 இயக்கம் சார்பில் பிரவீன் குமார், மறுமலர்ச்சி தமுமுக சார்பில் தலைவர் சீனி முஹம்மது உள்ளிட்டோர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்திருந்தனர்.

முழக்கங்களை எழுப்பிய மக்கள் திடீர் ஆவேசம் அடைந்து, மாநில செயலாளர் சகோ. தைமிய்யா தலைமையில் எழும்பூர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். காவல்துறையின் தடுப்புகளை உடைத்து மஜகவினர் ஆவேசத்துடன் நுழைந்தனர். மற்றவர்கள் தடுக்கப்பட்ட நிலையில், உள்ளே புகுந்த மஜகவினர் குமரி எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்தனர்.

கூட்டம் தொடர்ந்து முன்னறியதும் அனைவரும் வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு, வாகனங்களில் ஏற்றப்பட்டனர். பின்னர் மண்டபத்திற்கு அனைவரும் கொண்டு வந்த பிறகு தலைவர்கள் ஆவேச உரையாற்றினார்கள்.

கொந்தளிப்புடன் கூடிய மஜகவினரின் ஆவேஷம் காஷ்மீரிகளின் நியாயங்களை உசுப்பியது ஒரு மாபெரும் வெற்றியாகும்.

தகவல் :மஜக ஊடக பிரிவு