மாணவர் இந்தியா தலைமை நிர்வாகிகளுடன் மஜக மாநிலச் செயலாளர் தைமிய்யா ஆலோசனை..!

image

சென்னை.ஆக.26., மாணவர் இந்தியா மாநில நிர்வாகிகள் கூட்டம் சென்னை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாணவர் இந்தியா பொறுப்பாளரும், மஜக மாநிலச் செயலாளருமான என்.ஏ. தைமிய்யா M.sc அவர்கள் கலந்துகொண்டு ஆலோசனை நடத்தினார்.

இதல், #மாணவர்_இந்தியா மாநிலச் செயலாளர் அசாருதீன், மாநிலப் பொருளாளர் ஜாவித் ஜாபர், மாநிலத் துணைச் செயலாளர்களான அப்சர் செய்யத், பசீர் அகமது ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

நீட் தேர்விற்கெதிராக வரும் 27-08-2017 ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு கலந்தாய்வு நடைபெறும் ஓமந்தூரார் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் இந்தியாவை பலப்படுத்த வேண்டும், ஒவ்வொரு மாவட்டங்களிலும் கருத்தரங்கம் நடத்துவது, மாநில செயற்குழு கூட்டம் அக்டோபர் மாதம் நடத்துவதென்றும், உறுப்பினர் அட்டை வழங்குவது சம்பந்தமாகவும் முடிவெடுக்கப்பட்டது.

தகவல்;
#மாணவர்_இந்தியா_ஊடகப்பிரிவு,
தலைமையகம்,
#சென்னை.
25-08-2017