ஈரான் அதிபருக்கு இரங்கல் கூட்டம் மஜக மாநிலத் துணைச் செயலாளர் அரிமா அசாருதீன் பங்கேற்பு..

மே.24.,

உலங்கு வானூர்தி (ஹெலிகாப்டர்) விபத்தில் மரணமடைந்த ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைஸி அவர்களது நினைவேந்தல் கூட்டம் ஷியா-சன்னி ஒற்றுமை இயக்கம் சார்பாக நுஸ்ரத் அலி கான் அவர்களது ஏற்பாட்டில் ஆயிரம் விளக்கு பள்ளிவாசலில் நடைப்பெற்றது.

ஷியா காஜி குலாம் மெஹதி அவர்களது தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில் மஜக மாநில துணைச்செயலாளர் அரிமா A.M.அஸாருதீன் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.

ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைஸி அவர்களது மரணதிற்கு பின்னால் உள்ள சந்தேகங்களுக்கு தீவிர விசாரணை வேண்டும் என்று பேசி மஜக-வின் சார்பில் இரங்கலை வெளிப்படுத்தினார்.

மேலும் உலக சமாதானத்திற்கும் – அமைதிக்கும் எப்பொழுதும் எமது கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் முன்னிற்பார் என்றும், பாலஸ்தீன விவகாரத்தில் உரிய வகையில் பல நாடுகள் செயல்படாத நிலையில், ஈரான் அதிபர் இப்ராஹீம் ரைஸி அவர்களது துணிச்சலான நடவடிக்கையை மேற்கொள்காட்டி ‘முட்டையிடும் கோழிகளுக்கு மத்தியில் சண்டையிடும் சேவலாக இருந்தார்’ என அவர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை உலகம் முழுக்க பகிரப்பட்டது என்று குறிப்பிட்டார்.

மேலும் ராணுவ தளபதி காசிம் சுலைமானி அவர்கள் படுகொலை செய்யப்பட்டபோது தமிழக சட்டமன்ற வளாகத்தில் கண்டனத்தை பதிவு செய்தார் என்றும் மஜக சார்பாக வருடந்தோறும் நடைப்பெறும் அல்-குத்ஸ் தின நிகழ்வில் ஷியா காஜி குலாம் மெஹதி ஆர்வமுடன் பங்கேற்பார் என மஜக-வின் அனைத்து சமூக அரசியல் பங்கேற்பை குறிப்பிட்டு பேசினார்.

பத்திரிக்கையாளர் T.S.S.மணி உட்பட சமூக ஆர்வலர்கள், மார்க்க அறிஞர்கள் பலர் இந்திகழ்வில் பங்கேற்றனர்.

மாணவர் இந்தியா தலைவர். புரட்சி முழக்கம் பஷீர் அஹமது, மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில செயலாளர் பிஸ்மில்லா கான் மற்றும் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
22.05.2024.