மாலத்தீவில் உதயமானது மனிதநேய கலாச்சாரப் பேரவை தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்பு…

மே.23.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் 3 நாட்கள் நல்லெண்ண பயணமாக மாலத்தீவு வருகை தந்தார்.

அங்கு தமிழ்நாடு வாழ் சகோதரர்களுடன் நட்புறவு சந்திப்புகளை மேற்கொண்டார்.

பிறகு மஜக-வின் அயல்நாட்டுப் பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) யின் மாலத்தீவு மண்டல நிர்வாகம் அமைப்பது குறித்து மன்னர் சல்மான் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற ஒன்று கூடலில் பங்கேற்றார்.

வளர்ந்து வரும் மாலத்தீவின் வளங்களை தமிழ்நாட்டவர்கள் பயன்படுத்தும் வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தல், பெருகிவரும் வேலைவாய்ப்புகளை தாயக மக்களுக்கு பெற்றுக் கொடுத்தல், இங்கு பணிபுரிய வருபவர்களுக்கு உதவுதல், இங்கு இறப்பவர்களின் உடல்களை தாயகத்திற்கு அனுப்பி வைத்தல், இந்திய தூதரகத்துடன் இணைந்து கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துதல் என பல திட்டமிடல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

நிறைவாக கீழ்கண்ட நிர்வாகிகள் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார்கள்.

MKP மாலத்தீவு மண்டல நிர்வாகிகள் :

1) அ. அப்துல் வதூது –
மண்டல செயலாளர்,
(தூத்துக்குடி ஆத்தூர் – +960 7631847)

2) நா. உமர் பாரூக் –
அவைத் தலைவர் ,
(கயத்தார் – தூத்துக்குடி மாவட்டம்)
+91 7339495592

3) க. அனஸ்
பொருளாளர்,
(பரங்கிப்பேட்டை +919788436886)

4) மு. அ. ஜி. அபு உமர் அலி,
துணைச்செயலாளர்
(காயல்பட்டினம் +919994547773)

5) செ. சிக்கந்தர்
துணைச் செயலாளர்,
(தொண்டி +960 9544756)

தற்போது இந்தியப் பெருங்கடலிலும் மஜக-வின் மனித நேயப் பணிகள் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தகவல்:
#மனிதநேய_கலாச்சாரப்_பேரவை
#mkpitwing
#மாலத்தீவு_மண்டலம்
23.05.2024.