தென்காசி பரப்புரை…. மத்தியில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற அலை வீசுகிறது… சுங்க கட்டணம் ரத்து என்ற காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதி வரவேற்புக்குள்ளாகியுள்ளது! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பரப்புரை…

ஏப்ரல்.4.,

இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக தென்காசி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் டாக்டர் ஸ்ரீ ராணி குமார் அவர்களை ஆதரித்து இன்று தென்காசியில் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பரப்புரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதில் பங்கேற்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது…

ஒன்றிய பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளில் 23 இந்திய பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்துள்ளது.

இவர்கள் அதானி, அம்பானிகளுக்காக ஆட்சி நடத்துகிறார்கள்.

ஏழை- எளியவர்களுக்கு எதிரான ஆட்சியை நடத்துகிறார்கள்.

சுங்கச் சாவடி கட்டணங்கள் காரணமாக மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்

தென்காசியிலிருந்து காரில் சென்னைக்கு சென்றால் Toll Gate கட்டணம் 1200 ரூபாய் ஆகிறது.

இங்கிருந்து சரக்குகளை லாரியில் அனுப்பினால் அதற்கு இதை விட அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

விலைவாசி உயர்வுக்கு இது முக்கிய காரணமாக உள்ளது.

இதை ரத்து செய்வோம் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இது பெரும் வரவேற்புக்குள்ளாகியுள்ளது.

பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக வாக்குறுதி அளித்துள்ளது.

இப்போது இந்தியா கூட்டணி ஏறுமுகத்தில் உள்ளது.

ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் வலுத்து மோடி எதிர்ப்பலை உருவாகி விட்டது.

பிரபல அரசியல் வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சமீபத்தில் பாஜக கூட்டணி 200 இடங்களை தாண்டாது என கூறியுள்ளார்

தமிழ்நாட்டில் வாக்குகளை சிதற விடாமல், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் 39 தொகுதிகளிலும் நாம் வெல்ல வேண்டும்.

அதற்காக மனிதநேய ஜனநாயக கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து களமாடுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தலைவருடன், மஜக இளைஞர் அணியின் மாநில துணைச் செயலாளர் நெல்லை பிலால் அவர்களும் பேசினார்.

நிறைவாக மஜக மாவட்ட துணைச் செயலாளர் சிக்கந்தர் நன்றி கூறினார்.

மாவட்டச் செயலாளர் அஜ்மீர் தலைமையில், பொருளாளர் செய்யது அலி உள்ளிட்டோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இப்பகுதியில் வழக்கத்துக்கு மாறாக பெண்கள் அதிக அளவில் பங்கேற்றது மகிழ்ச்சியளிப்பதாகவும், மஜக-வினர் சிறப்பாக களப்பணியாற்றுவதாகவும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பாராட்டி பேசினர்.

ரமலான் பெருநாள் நெருங்கியிருக்கும் நிலையில், நோன்பு துறப்புக்கும், இரவு தொழுகைக்கும் இடைப்பட்ட நேரத்தில் இப்பகுதி மக்கள் திரண்டது கூட்டணி கட்சியினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

நேரமின்மையாலும், ரமலான் பண்டிகை பரபரப்பு காரணமாகவும், வேட்பாளர் சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் காரணமாகவும் கடையநல்லூர், வடகரை, புளியங்குடி, சங்கரன் கோவில் பரப்புரைகளை திட்டமிட முடியவில்லை என்பதால், ரமலான் பெருநாளைக்கு பிறகு மஜக பரப்புரையாளர்கள் இங்கு வருகை தருமாறு திமுக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

இன்றைய பரப்புரையில் திமுகவை சேர்ந்த நகர்மன்ற தலைவர் சாதிக், துணைத் தலைவர் சுப்பையா உள்ளிட்ட இந்தியா கூட்டணி நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்;
#தேர்தல்_பணிக்குழு
#மனிதநேய_ஜனநாயக_கட்சி
#MJKitWING
#தென்காசி_நாடாளுமன்ற_தொகுதி
04.04.2024.