மார்ச்.27.,
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மஜக-வினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் மஜக-வினர் பங்கேற்றனர்.
திரும்பும் திசை எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர்.
இந்நிகழ்வில் அமைச்சர் T.R.B.ராஜா, திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீபா, அன்வர் ,ஜாஃபர் சாதிக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஃபயாஸ், துணைச் செயலாளர் ஜாகீர், சுற்றுச்சூழல் அணி மாவட்ட செயலாளர் ஹக்கீம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நர்சரி ஷாஜஹான், ஹபீப், பைரோஸ், மற்றும் சக்கீர், பகுதி, கிளை நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்;
#மஜக_தேர்தல்_பணிக்குழு
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING.
#கோவை_மாநகர்_மாவட்டம்.
27.03.2024.