You are here

புருணே பிரமுகர் இல்ல மணவிழா… மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்து….

மார்ச்.03.,

புருணே இந்திய வணிகர் சங்க தலைவர் நசீர் அகமது அவர்களின் மகள் – மணமகள் N.ரிஸ்வானா நஸீபா அவர்களுக்கும், நாகூர் முகம்மது உதுமான் அவர்களின் மகன் -மணமகன் பாஸித் முஹம்மது அவர்களுக்கும் இன்று நிக்காஹ் என்னும் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சி சென்னை ரெஸிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன் MLA, தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு, தமிழ்நாடு விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் P.R. பாண்டியன், மஜக பொதுச் செயலாளர் மெளலா. நாசர், குலிஸ்தான் பத்திரிக்கை ஆசிரியர். பெங்களூர் முக்தார் அகமது, MGK நிஜாமுதீன் Ex, MLA உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

இதில் இந்தியாவுக்கான புருணே நாட்டு தூதர் டத்தோ. அலாவுதீன் முகம்மது தாஹா மற்றும் புருணே நாட்டு பிரதிநிதிகளும், புருணே வாழ் இந்திய பிரமுகர்களும் பங்கேற்றனர்.

இதில் மஜக மாநில துணைச்செயலாளர்கள் அஸாருதீன், ஏ.ஜே.எஸ்.தாஜூதீன், எஸ்.எம் நாசர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மாணவர் இந்தியா தலைவர் பஷுர் அஹமது, இளைஞர் அணி மாநில செயலாளர் பைசல், மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான் கான், மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், வழக்கறிஞர் பாசறை செயலாளர் அமீன், வழக்கறிஞர் பாசறை துணைச்செயலாளர் ஸ்வாதீஷ் உள்ளிட்டோரும் இதில் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்சென்னை_மாவட்டம்
03.03.2024.

Top