பள்ளிவாசலில் IAS பயிற்சி மையத்தை உருவாக்குங்கள்… திருச்சியில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

ஜனவரி.27.,

திருச்சி தென்னூர் பெரிய பள்ளிவாசலில் புதிய கட்டிடப் பகுதி விஸ்தரிப்பை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது…

பன்மை சமூகத்தில் வாழும் நிலையில் அதற்கேற்ப சமுதாயத்தை ஜனநாயகப் படுத்தி, அவர்களை அறிவுத்தளத்திற்கு நாம் உயர்த்த வேண்டும்.

உணர்ச்சிகரமான நிலையிலிருந்து அவர்களை முதிர்ச்சிப்படுத்திட வேண்டும்.

பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்ட பிறகு, ஒராயிரம் பள்ளிகள் எழும் என ஒரு தலைவர் பேசியதை குறிப்பிட்டார்கள்.

தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் உள்ள நிலை வேறு.

உ.பி, டெல்லி, ம.பி, பீஹார் மாநிலங்களில் எத்தனைப் பள்ளிகள் உருவாக்கப்பட்டுள்ளன? அப்படி உருவாகமல் போனதற்கு என்ன காரணம்? யார் காரணம்? என்பது பற்றி சுய ஆய்வுக்கு நாம் தயராக வேண்டும்.

கொள்கை எதிரிகள் நுட்பமாக செயல்படும்போது, அதற்கேற்ப பன்முக சூழலை புரிந்துக் கொண்டு எதிர்வினையாற்ற தயாராக வேண்டும்.

சமுதாயம் ஒன்றுபட வேண்டும் என சிலர் பேசுகிறார்கள். அப்படி பொது இடங்களில் பேசுவதால் அது வேறுவித எதிர்வினைகள் உருவாகி விட கூடாது.

தனிமைப்படும் சூழலை நாமே உருவாக்கிக் கொள்ளக் கூடாது.

எல்லா மக்களுடன் இணைந்து போராடுவதே வெற்றியை தரும்

நீதியின் பக்கம், அரசியல் சட்டத்தின் பக்கம் நிற்கும் அனைவரையும் இணைத்து போராட முன் வர வேண்டும்

அதுதான் நல்லது. அதுதான் வெற்றியை தரும்.

இங்கு பள்ளிவாசல் விஸ்தரிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

எதிர்காலத்தில் இங்கு ஒரு நூலகம் உருவாக்கப்பட வேண்டும்; ஒரு IAS பயிற்சி மையம் உருவாக்கப்பட வேண்டும் என்ற ஆவலை, கோரிக்கையாக முன்வைத்து என் உரையை நிறைவு செய்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அவருடன் மஜக மாநில செயலாளர் அகமது கபீர், மாநில துணைச் செயலாளர் புதுகை. துரை முகம்மது மற்றும் திருச்சி மாவட்ட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருச்சி_மாவட்டம்
27.01.2024