முதல்வர் தலையிட வேண்டும்..
ஆர்ப்பாட்ட களத்தில் மஜக தலைவர் மு தமிமுன் அன்சாரி வலியுறுத்தல்….
ஜனவரி.12.,
அதிராம்பட்டினத்தில் 50 ஆண்டு கால இமாம் ஷாபி பள்ளிக்கூட இடத்தில் நடைபெற்று வரும் பெண்கள் கல்வி கூட இட விவகாரம் தொடர்பாக நகராட்சியின் நடவடிக்கைகள் விமர்சனம் ஆகி உள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், நகராட்சி துணை தலைவரும், திமுக பிரமுகருமான குணசேகரன் அவர்களின் தூண்டுதலில் அங்கு சீல் வைக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இரண்டு நாட்களாக நடைபெற்று வரும் காத்திருப்பு போராட்ட களத்தில் இன்று மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று போராட்ட நோக்கத்தை ஆதரித்து பேசினார்.
அப்போது முந்தைய மாவட்ட ஆட்சியர் அவர்கள் இந்த இடத்தை இமாம் ஷாபி பள்ளிக்கூட நிர்வாகத்திற்கு விற்றுவிடலாம் என்று சொன்ன நிலையில், நகராட்சி ஏன் இதை எதிர்க்கிறது என்றவர், இவ்விடயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு சுமூகமாக தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதன் பிறகு போராட்ட குழுவினரிடமும், மக்களிடமும் கலந்துரையாடினார்.
இரவு 8 மணிக்கு பிறகும் 500 பெண்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது
இன்றைய களத்தில் மஜக துணைப் பொதுச் செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன், மாவட்ட செயலாளர் அதிரை .A ஷேக், மாவட்ட பொருளாளர் L.M.A.அபுபக்கர், மாவட்ட துணைச் செயலாளர் பைசல் அஹமத், மாநில செயற்குழு உறுப்பினர் ஸ்மார்ட் சாகுல், அதிரை நகரச் செயலாளர் முகமது பாஷித் மற்றும் அதிரை நகர நிர்வாகிகள் போராட்டக் குழு நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தஞ்சை_தெற்கு_மாவட்டம்
12.01.2024