You are here

பரபரப்பாகும் திருச்சி சிறை முற்றுகை போராட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 30க்கும் மேற்பட்ட வேன்களில் புறப்பட தீர்மானம்…

எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் மாவட்ட மஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு..

ஜனவரி.12.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் திருப்பூர் மாவட்ட ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் ராஜா முகமது தலைமையில் நேற்று (11.01.2024) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநில செயலாளரும், மாவட்டத்தின் மேலிட பொறுப்பாளருமான M.H.ஜாபர் அலி அவர்கள் பங்கேற்று கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்தும், நிர்வாக உள் கட்டமைப்புகளை வலிமைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசனைகளை வழங்கினார்.

அவருடன் இளைஞரணி மாநில துணை செயலாளர் PMA.பைசல் அவர்கள் நிர்வாக ஒழுங்குமுறை குறித்து விரிவாக நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தார்.

இக்கூட்டத்தில் பிப்ரவரி 10, 2024 அன்று சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளை கடந்த ஆயுள் சிறைவாசிகளை நிரந்தரமாக விடுதலை செய்யக்கோரி மஜக சார்பாக நடைபெற இருக்கின்ற திருச்சி மத்திய சிறை முற்றுகைப் போராட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்திலிருந்து 30-க்கும் மேற்பட்ட வேன்களில் மக்களை திரட்டிச்செல்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

மேலும் மாவட்டத்தில் அதிகமான புதிய கிளைகளை உருவாக்குவது என்றும், பரவலாக கொடியேற்று நிகழ்வுகள் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது திரளான மாற்றுக் கட்சி இளைஞர்கள் தங்களை மஜக-வில்
இணைத்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருப்பூர்_மாவட்டம்
11.01.2024

Top