வேலூர் மாநகராட்சிக்கு எதிராக மஜக போராட்டம் எதிரொலி…

இறங்கி வந்த அதிகாரிகள்….

ஒத்திவைக்கப்பட்டபோராட்டம் …

ஜனவரி.11.,

வேலூர் மாநகராட்சி குறிப்பிட்ட சில பகுதிகளில் சாலை / மின்சார வசதிகள் போன்ற அடிப்படை பணிகளில் கவனம் செலுத்தாத நிலையில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

மஜக மாவட்ட செயலாளர் ஏஜாஸ் அவர்கள் தலைமையில் போராட்ட களப்பணிகள் தீவிரமானது.

இதனிடையே இன்று மதியம் மாநகராட்சி அதிகாரிகளும், காவல்துறை அதிகாரிகளும் மஜக-வினரை அவசரப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.

மஜக-வின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாகவும், உடனடியாக பணிகளை அப்பகுதிகளில் தொடங்குவதாகவும் வாக்குறுதி அளித்தனர்.

மாலை 4 மணிக்குள் பணிகளை தொடங்கினால் போராட்டத்தை ஒத்தி வைப்பதாக மஜக-வினர் தெரிவித்தனர்.

உடனடியாக மதியம் 2.30-க்கு மாநகராட்சி பணியாளர்களும், அதிகாரிகளும் அப்பகுதிகளில் வேலைகளை தொடங்கினர்.

இத்தகவலை மஜக-வினர் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு தெரிவித்ததும், இது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

ஆலோசனைக்கு பிறகு போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக மஜக-வினர் அறிவித்துள்ளனர்.

மஜக-வினரின் அயராத முயற்சியின் காரணமாக நீண்ட கால பிரச்சனைகள் தீர்வுக்கு வந்துள்ளதாக அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

தகவல் :
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#வேலூர்_மாவட்டம்
11.01.2024