
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி வருகை தந்துள்ளார்.
இதில் கட்சி வளர்ச்சி பணிகள், நிர்வாகிகள் சந்திப்பு, சான்றோர்கள் சந்திப்பு என நிகழ்ச்சிகள் தொகுக்கப்பட்டுள்ளது.
இன்று வழுத்தூர் பகுதிக்கு வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்கள், uae அல் பரிதா குழுமத்தின் தலைவர் அபுல் கலாம் அவர்களை சந்தித்து உரையாடினார்.
அடுத்து புதுமடம் வருகை தந்த பொதுச் செயலாளர் அவர்களுக்கு புதுமடம் தெற்கு தெரு மஸ்ஜித் ரஹ்மத் ஜமாத் தலைவர் ரைசுல் இஸ்லாம் அவர்கள் தலைமையில் ஜமாத்தினர் வரவேற்பு அளித்தனர்.
அப்போது மஸ்ஜித் வளாகங்களை கல்வி, பொருளாதாரம், குடும்பவியல், நலத்திட்ட உதவிகள் ஆகிய பயன்பாடுகளுக்கு திட்டமிடுவது குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.
இதை ஜமாத்தினர் இவை நல்ல விஷயங்கள் எனக் கூறி அதை செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக கூறினர்.
இச் சந்திப்பில் புதுமடம் ஐக்கிய சபையின் தலைவர் செய்யது. மு.கெளஸ் துணை தலைவர் இ. அஜ்மல் சரிபு, உறுப்பினர் ஹாஜா முஹைதீன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுச் செயலாளருடன் மஜக மாநில துணை செயலாளர் பேராவூரணி சலாம், இளைஞர் அணி மாநில பொருளாளர் புதுமடம் பைசல், மாவட்ட பொறுப்பு குழு தலைவர் முகவை நசீர், உறுப்பினர்கள், கீழை. இப்ராஹிம், அஜ்மல்தீன், உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.