
மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்டம் மற்றும் இராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனையும் இணைந்து நடத்திய இரத்ததான முகாம் மாவட்ட செயலாளர் கண்மணி காதர் தலைமையில் இன்று நடைபெற்றது.
முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக மகப்பேறு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் DR.மாரியப்பன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கிவைத்தார்கள்.
இம்முகாமில் திரளானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.
இதில் மாவட்ட துணை செயலாளர் ஹாபில் மஹபூப் ஜான் உள்ளிட்ட மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
MJTS மாவட்ட தலைவர் முருகேசன் ராஜா நன்றியுரையாற்றினார்.