
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை மாநகர் மாவட்டம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
முகாமை தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி அவர்கள் பங்கேற்று தொடங்கி வைத்து மருத்துவ முகாம் குறித்த விழிப்புணர்வு மற்றும் ஆலோசனைகளையும் வழங்கினார்.
மேலும் மருத்துவர் சங்கர் ராம் அவர்கள் வருகை தந்து ஆலோசனைகளை வழங்கினார்.
முன்னதாக முன்னாள் அமைச்சர் தஞ்சை எஸ்.என்.எம்.உபையதுல்லா அவர்களின் வானொலி பேச்சு தொகுப்பு புத்தகத்தை முகாமில் கலந்து கொண்ட மருத்துவர் விஸ்வநாதன் அவர்களுக்கு துணை மேயர் அவர்கள் பரிசளித்தார்.
மேலும் மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள் ” புத்தகத்தை மாவட்ட பொறுப்பாளர் ஹ.சேக் முஹம்மது அப்துல்லாஹ் அவர்கள் துணை மேயர் அவர்களுக்கு பரிசளித்தார்.
மருத்துவ முகாமிற்கு மாநில துணை செயலாளர் அகமது கபீர் அவர்கள் தலைமை தாங்கினார், மாநில கொள்ளை விளக்க அணி துணை செயலாளர் காதர் பாட்சா அவர்கள் முன்னிலை வகித்தார்.
இம்முகாமில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இந்நிகழ்வில் பஹ்ரைன் மண்டல செயலாளர் வல்லம் ரியாஸ், மாவட்ட பொருப்பாளர் ஹ.சேக்முஹம்மது அப்துல்லாஹ், பாவை ஒன்றிய செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர செயலாளர் சாகுல் ஹமீது, மாநகர பொருளாளர் முகமது காமில் மற்றும் மாநகர நிர்வாகிகள் அக்ரம், சாகுல் ஹமீது மற்றும் திரளானோர் பங்கேற்றனர்.