
ஜன:26., 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதை தொடர்ந்து மஜக ஈரோடு மேற்கு மாவட்டம் அந்தியூரில் தேசிய கொடியேற்று விழா நடைப்பெற்றது.
மாவட்டச் செயலாளர் ஏ.கே.ஷானவாஸ், அவர்கள் முன்னிலை வகித்தார்.
அந்தியூர் பள்ளிவாசல் இமாம் முகமது கவுஸ் ரசாதி, ஜியாவுதீன், ஆகியோர் தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
இந்நிகழ்வில் அந்தியூர் நகர செயலாளர் மைதீன் பேக், பொருளாளர் பிலால், இளைஞர் அணி செயலாளர் கரீம், மனித உரிமை அணி மாவட்ட செயலாளர் உஸ்மான் அலி, மற்றும் பரக்கத், ஹிதாயத், ஆரிப், ரஹ்மத் , அதிமுக நிர்வாகி மூர்த்தி, சேக் தாவூத்,மாணிக்கம், மற்றும் மாவட்ட, நகர, நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_மேற்கு_மாவட்டம்
26.01.2022