73வது குடியரசு தினவிழா! ஈரோட்டில் மஜக மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா தேசிய கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார்!

ஜன:26., 73வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தேசிய கொடியேற்றுதல், இனிப்பு வழங்குதல், உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

அதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு மாவட்டம் சுல்தான் பேட்டையில் 73வது குடியரசு தினவிழா மாவட்ட செயலாளர் சபீக் அலி, தலைமையில் நடைபெற்றது.

இதில் மாநில துணைசெயலாளர் அ.பாபு சாஹின்சா அவர்கள் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளார்கள் பாபு, பக்கீா் முகமது, மாணவர் இந்தியா பயாஸ், இளைஞரணி துணை செயலாளா் தாஜ், பகுதி செயலாளா் ஹாரிஸ், சேக், மற்றும், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#ஈரோடு_கிழக்கு_மாவட்டம்
26.01.2022