
முஸ்லிம் சமூகத்தின் மீது அவதூறு பரப்பும் விதமாக எடுக்கப்பட்டுள்ள
“தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தடை செய்ய கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என பொதுச்செயலாளர் மு. தமிமுன் அன்சாரி அறிவித்திருந்தார்.
அதனையொட்டி இன்று மத்திய சென்னை மாவட்ட மஜக சார்பாக, சென்னை – திருமங்கலத்தில் உள்ள VR மால் திரையரங்கம் முற்றுகைப் போராட்டம் மாவட்ட செயலாளர் பிஸ்மில்லாகான் தலைமையில் இன்று மாலை நடைபெற்றது.
இதில் மஜக மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநிலத் துணைச் செயலாளர் அஸாருதீன், மெரினா போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் ஜல்லிக்கட்டு ஜலீல் ஆகியோர் பங்கேற்று கண்டன கோஷம் எழுப்பினர்.
பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அஸாருதீன் அவர்கள் இப்படம் தடை செய்யும் வரை போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்தார்.
தொடர்ச்சியாக VR மால் திரையரங்கத்தை நோக்கி முன்னேற முயன்ற மஜக-வினரை போலீசார் தடுத்ததால் சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாம்பரம் தாரிக், மாணவர் இந்தியா மாநில தலைவர் பஷீர், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துர் ரஹ்மான், MJTS மாநில துணை செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், ஆகியோர் உடன் இருந்தனர்.
தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#மத்திய_சென்னை_மாவட்டம்
06.05.2023
#TheKeralaFakeStory