மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் கோவை மாநகர காவல் துறை ஆணையாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது மாநில செயலாளர் ஜாபர் அலி அவர்கள் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள்” என்ற நூலை ஆணையாளரிடம் கையளித்தார்.
இந்நிகழ்வின் போது மாவட்ட பொருளாளர் எம்.சுலைமான், மாவட்ட துணைச் செயலாளர் ஹெச்.எம்.முகமது ஹனீப், ஏ.எஸ்.ஜாபர் சாதிக், கே.டி.யு.காஜா, ஏ.அன்வர் பாஷா, எம்.ஹக்கீம், மற்றும் ஃபயாஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.