You are here

உறவை வளர்ப்போம்! நோன்பு கஞ்சியை சகலருக்கும் விநியோகிப்போம்! மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேச்சு…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் ஊழியர்களுக்காக நடைபெற்று வரும் இப்தார் நிகழ்வில் இன்று பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக சென்னை கிழக்கு மாவட்ட திமுக-வின் பொருளாளரும், இப்பகுதி மாமன்ற உறுப்பினருமான முகமது ஆசாத் MC., அவர்களும் பங்கேற்றார்.

அதில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பேசியதாவது…

நோன்பு துறக்கும் இந்த நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனைகள் இறைவனால் முன்னுரிமை தரப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நாம், நமக்காக மட்டுமல்ல… எல்லோருக்காகவும் பிரார்த்திக்க வேண்டும்.

நமது நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், வளங்களோடும், மகிழ்ச்சியோடும் வாழ பிரார்த்திப்போம்.

நோய் நொடியின்றி, பெரும் தொற்று நோய்களிலிருந்து நாடும், மக்களும் பாதுகாக்கப்பட இறைவனிடம் பிரார்த்திப்போம்.

இந்த புனித ரமலான் மாதம் இறைவனின் மீதான தேடல்களையும், இறையச்சத்தையும், நமக்கு ஏற்படுத்துகிறது.

இம்மாதத்தில் நற்செயல்களை செய்து; தர்மங்களை செய்து; அன்பையும், இரக்கத்தையும் வெளி காட்ட வேண்டும்.

நாம் நோன்பு துறக்கும்போது பருகும் இந்த நோன்பு கஞ்சியை பிற சமுதாய மக்கள் தாங்களும் உண்ண வேண்டும் என விரும்புகிறார்கள்.

தங்களுக்கு கிடைக்குமா? என கேட்கிறார்கள்.

அவர்களை போன்றோருக்கு நோன்பு கஞ்சி கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள்.

உங்களுக்கு பக்கத்து வீட்டில், அல்லது நீங்கள் வசிக்கும் தெருவில் உள்ள முஸ்லிம் அல்லாத நண்பர்களுக்கு நோன்பு கஞ்சியை கொடுத்து அனுப்புங்கள்.

மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிக்கை நண்பர்கள், காவல்துறையினர், தொழிலாளர்கள், விவசாயிகள், வணிகர்கள் என யாருக்கெல்லாம் அதைக் கொடுக்க முடியுமோ, அவர்களுக்கெல்லாம் கொடுங்கள்.

அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

நீங்கள் காட்டும் அன்பை விட, உங்கள் மீது அதிக அன்பை காட்டுவார்கள்.

இது உறவை வளர்க்கும், வேற்றுமையை குறைக்க உதவும். அமைதி செழிக்க உதவும்.

எனவே மஜக-வினர் இதை அதிகமாக முன்னெடுக்க வேண்டும்.

மற்றவர்களும் இப்பணியை செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச் செயலாளர் அசாருதீன், மாணவர் இந்தியா தலைவர் பஷீர், மருத்துவ சேவை அணி செயலாளர் அப்துல் ரஹ்மான், இளைஞர் அணி பொருளாளர் பைசல், MJTS மாநில துணைச் செயலாளர் இப்ராஹிம் ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பிஸ்மி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெய்னுதீன், மத்திய சென்னை மாவட்ட துணை செயலாளர் காஜா மைதீன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் S.M.நாசர், MJTS மாவட்ட செயலாளர் தாஜ்தீன் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கமாலுதீன்,தென் சென்னை பொறுப்பாளர் பாலவாக்கம் காதர், திருவள்ளூர் கிழக்கு கமாலுதீன், அன்சர் பாஷா, வடசென்னை கிழக்கு MJTS மாவட்ட செயலாளர் தாஜுதீன் உள்ளிட்ட நிர்வாகிகளும், ஊழியர்களுடன் கலந்து கொண்டனர்.

Top