நாகை ஆட்டோ ஓட்டுநர்களுடன்…. மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்திப்பு …

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் நாகை புத்தூர் ஆட்டோ ஸ்டேன்ட் ஓட்டுநர்களை சந்தித்து நலம் விசாரித்தார்.

அவர் இங்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது கார், வேன், ஆட்டோ, தட்டு ரிக்ஷா தொழிலாளர்களுடன் நல்ல நட்புறவில் இருந்தார்.

அடிக்கடி அவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிவார். அதை நிவர்த்தி செய்தும் தருவார்.

அவர் MLA-வாக இல்லாத நிலையிலும் இந்த நட்புறவு தொடர்கிறது.

அவர்களின் அழைப்பை ஏற்று வருகை தந்த அவருக்கு, தேனீர் அளித்து ஆட்டோ ஒட்டுனர்கள் அன்பை வெளிப்படுத்தினார்கள்.

அரை மணி நேரம் அவர்களுடன் அளவளாவிய பிறகு அவர் புறப்பட்டார்.