அண்ணாமலை பல்கலைக்கழகம்… பணி நிரந்தரம் கேட்டு தொடர் போராட்டம்…

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் கடந்த 13 ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வரும் 205 ஊழியர்கள் பணி நிரந்தரம் கேட்டு தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களை மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி சந்தித்து பேசினார்.

இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் அரசின் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்வு காண முயற்சி எடுக்கப்படும் என உறுதியளித்தார்.