மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் மாநில தலைமையகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
இக்கூட்டத்தில் எதிர்வரும் பிப்ரவரி-28 கட்சியின் 8-ம் ஆண்டு துவக்க நிகழ்வை முன்னிட்டு இரு மாவட்டங்களிலும் கொடியேற்று நிகழ்வுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பொதுச் செயலாளர் உடன் மாநில செயலாளர் பல்லாவரம் ஷஃபி, மாநில துணைச்செயலாளர்கள் நெய்வேலி இப்ராஹிம், அஸாருதீன், மாணவர் இந்திய தலைவர் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் தாரிக்,
மருத்துவ சேவை அணி செயலாளர் ரஹ்மான், இளைஞரணி பொருளாளர் முகமது பைசல், MJTS மாநில துணை செயலாளர் மாத்தூர் இப்ராஹிம் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும் இந்நிகழ்வில் கிழக்கு மாவட்ட செயலாளர் S.M. நாசர், மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், கிழக்கு மாவட்ட பொருளாளர் முகம்மது ஜாபர், துணை செயலாளர்கள் நிஜாம் பாய், அன்சர், அணி செயலாளர் அப்ரார், திருவள்ளூர் மேற்கு மாவட்ட துணை செயலாளர் P.M.பஷீர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.