மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் “மக்களுடன் மஜக” என்ற திட்டத்தின் கீழ் பொது மக்களின் அடிப்படை கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீர்வு காணக்கூடிய பணிகள் மாவட்டங்கள் தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது
அதன் ஒரு நிகழ்வாக மஜக திருச்சி மாவட்ட செயலாளர் S. அந்தோணி ராஜ் அவர்கள் தலைமையில் திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் D.நேரு அவர்களை சந்தித்தனர்.
இச்சந்திப்பின் போது தாய்சேய் நலப் பிரிவு பகுதிகளில் சுகாதாரம் குறித்தும், நோயாளிகளுக்கு வெண்ணீர் சரிவர வழங்காததை மருத்துவர் கவனத்திற்கு கொண்டு சென்று கோரிக்கை மனுவை மஜகவினர் அளித்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பக்கீர் மொய்தீன் பாபு பாய், மாவட்ட செயலாளர்கள் சையது முஸ்தபா, ஜமாலுதீன், மைதீன்,Mjts.தலைவர் ஷேக் அப்துல்லா,k.அன்வர் பாட்ஷா, சையது முகமது, ஆழ்வார் தோப்பு ஜாகிர் உசேன், மற்றும் உடனிருந்தனர்.