செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்..!

மனிதநேய ஜனநாயக கட்சியின் செங்கை வடக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் நேற்று (22/01/2023) மாவட்ட செயலாளர் தாம்பரம் ஜாகிர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மாவட்ட மேலிட பொறுப்பாளருமான பல்லாவரம் ஷஃபி அவர்கள் பங்கேற்றார்.

இக்கூட்டத்தில் தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் மஜக 2023” செயல் திட்ட பணியை மாவட்ட முழுவதும் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

மேலும் எதிர்வரும் ஜனவரி 26 குடியரசு தினத்தன்று மாவட்ட முழுவதும் தேசியக் கொடியேற்று நிகழ்வு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஆலந்தூர் சலீம், A.அப்துல் சமது, ஆலந்தூர் பகுதி செயலாளர் கபீர் முகமது, பொருளாளர் பஷீர் அகமது, கண்டோன்மென்ட் நகர செயலாளர் தமீனா, சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர் ஹபீப் ரஹ்மான், மற்றும் நகர, கிளை நிர்வாகிகள் பங்கேற்றனர்.