ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனை கூட்டம்…

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட ஆலோசனைக் கூட்டம் மாவட்டச் செயலாளர் சபிக் அலி, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்சா, அவர்கள் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1.ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது.

2.ஈரோடு மாநகரக்குட்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்குமாறு மாநகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் பாபு, மாவட்ட துணைச் செயலாளர் பக்கீர் முகமது, தொழிற்சங்க மாவட்ட தலைவர் சபர் அலி, தகவல்கள் பணி மாவட்ட செயலாளர் பாசித், இளைஞரணி மாவட்ட செயலாளர் திலீப் குமார், மாவட்டத் துணைச் செயலாளர் தினகரன், அக்ரஹார பகுதி செயலாளர் ஜாவித், கருங்கல்பாளையம் பல செயலாளர் ஹாரிஸ், மற்றும் மீரான், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .