மஜக நாகை மாவட்ட புதிய நிர்வாகிகள் பொதுச்செயலாளரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை மாவட்டத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பிறகு ‘மக்களுடன் மஜக’ பணிகள் குறித்தும், அதன் அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்தும் அவர்களிடம் பொதுச் செயலாளர் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் மாநில துணை பொதுச்செயலாளர் மதுக்கூர் ராவுத்தர்ஷா அவர்கள் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து கூறினார்.

இதில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ் தலைமை செயற்குழு உறுப்பினர் ஷாகுல் ஹமீது, மாவட்ட துணைசெயலாளர்கள் கண்ணுவாப்பா (எ) ஷாகுல் ஹமீது, அஹமதுல்லாஹ், பால முரளி, மாவட்ட இளைஞரணி செயலாளர் அப்துல் அஜீஸ், மஞ்சக்கொல்லை ஒன்றிய செயலாளர் சதாம் முஹம்மது ஆகியோர் உடனிருந்தார்.