கடலூர் மாநகர புதிய பேருந்து நிலையம் எம்.புதூர்-க்கு மாற்றப்படுவதை கண்டித்து கடலூரில் அனைத்து கட்சி, பொதுநல இயக்கங்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக கடலூர் மாவட்ட செயலாளர் S. மன்சூர் அவர்கள் பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
இதில் மாநகர பொருளாளர் S.ஹாரூன் ரஷீத், மாநகர துணைச் செயலாளர் உமர் பாரூக், இளைஞர் அணி செயலாளர் முகமது அசாருதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.