மஜக நெல்லை மாவட்டம் வீகேபுரம் கிளை பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவமுகாம்…!


நெல்லை டிச.17.,

மனிதநேய ஜனநாயக கட்சி நெல்லை மாவட்டம், அம்பை ஒன்றியம், வீ.கே.புரம் கிளை மருத்துவ சேவை அணி சார்பாக நாகர்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய, இலவச கண்சிகிச்சை முகாம், வீ.கே.புரம் கருத்தையாபுரம் ஜீம்ஆ பள்ளியில் நடைபெற்றது. இம்முகாமிற்கு அம்பை ஒன்றிய செயலாளர் M.அன்சர்பாபு தலைமை தாங்கினார்.

முகாமை மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம் துவக்கி வைத்தார், முன்னதாக மருத்துவமனை மேளாளர் சன்முகம் அவர்கள் மஜக மேற்கொண்டுவரும் மக்கள் பணிகுறித்து சிலாகித்துப் பேசினார்.

இதில் மஜக மாவட்ட துணை செயலாளர் A.செய்யதலி, அம்பை ஒன்றிய துணை செயலாளர் A.ஜாஹிர், மனித உரிமை அணி முருகேசன், பேட்டை நகர துணை செயலாளர் சம்சுதீன், கருத்தையாபுரம் ஜீம்ஆ பள்ளி தலைவர் காதர்மைதீன், ஜமாத் செயலாளர் காஜாமைதீன் ஆகியோர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

இம்முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் வருகை தந்து பயனடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நெல்லை_மாவட்டம்
17-12-2020