உரிமைகள் காக்க உறுதியேற்போம்

பொன் விளையும் பூமியில் நம்பிக்கைப் பொங்க விதைத்ததை உற்சாகமாக அறுவடை செய்து; அதன் வழியாக செல்வம் குவித்து ; மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இன்பத் திருவிழாவாக பொங்கல் போற்றப்படுகிறது.

வயலோடு சேர்ந்தது எங்கள் வாழ்க்கை; எங்கள் வாழ்க்கையோடு இணைந்தது இயற்கை என உரத்து முழங்கி செயல்படுபவர்கள் உழவர்கள்.

அவர்களே இத்திருவிழாவின் கதாநாயகர்கள்.

மக்களின் பசியைப் போக்கும் அரிய உழைப்பை வழங்கிடும் உழவர் பெருமக்களுக்கு நன்றி செலுத்திடும் வகையில், முழு சமூகமும் தொடர் விடுமுறை நாட்களுடன் இத்திருநாளை அவர்களுடன் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

இது உலகத் தமிழர்களை சாதி, மத சார்பற்று பண்பாட்டு உணர்வுகளுடன் இணைக்கும் பெருவிழாவாகவும் திகழ்கிறது.

இத்திருநாளில் நீர் வளம், நிலவளம், சுற்றுச்சூழல் ஆகியவற்றை பாதுகாக்கவும்; தமிழர் கலாச்சாரம், தமிழ்நாட்டின் உரிமைகள் ஆகியவைகளை தற்காக்கவும் உறுதியேற்போம்.

பொங்கலை கொண்டாடும் அனைவருக்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.