மனிதநேய ஜனநாயக கட்சியின் நீலகிரி கிழக்கு மாவட்ட ஆலோசனைக்கூட்டம் இன்று (30/12/2022) மாவட்ட செயலாளர் பெரியார் கார்த்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் மஜக 2023” செயல் திட்ட பணியை மாவட்ட முழுவதும் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
இக்கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் ரவி வர்மா, ஹுசைன் மற்றும் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.