மனிதநேய ஜனநாயக கட்சியின் விருதுநகர் மாவட்டம் மற்றும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் பரிசோதனை முகாம் இன்று (28.12.2022) மாவட்ட பொருளாளர் தமீம் அன்சாரி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட துணை செயலாளர்கள் ஹாபிழ் மகபூப்ஜான், முத்துவேல், ரஹ்மத்துல்லாஹ், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் J.நூர் முகம்மது, MJTS நிர்வாகிகள் முருகேசன் ராஜா, IMAK நூர் முகம்மது, இளைஞரணி செயலாளர் காளிராஜ் மற்றும் நகர செயலாளர் சம்சுதீன் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் இந்நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
மாவட்ட செயலாளர் கண்மணி காதர் அவர்களின் தாயார் சில நாட்களுக்கு முன்பு மரணமடைந்த நிலையிலும் அலைபேசி வாயிலாக நிர்வாகிகளுக்கு இந்நிகழ்ச்சி குறித்த தெளிவான திட்டமிடல்களை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மருத்துவ முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இதன் மூலமாக கடந்த ஐந்து வருடங்களாக மாவட்டம் முழுவதும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர் இலவச பொது மருத்துவ முகாம்களை நடத்தி விருதுநகர் மாவட்ட மஜக-வினர் சாதனை புரிந்துள்ளனர்.