You are here

தஞ்சை வடக்கு மற்றும் மத்திய மாவட்ட ஆலோசனைக் கூட்டம்.!

மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களின் ஒருங்கிணைந்த ஆலோசனைக்கூட்டம் நேற்று (27.12.2022) மாநில துணை செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பாளருமான அஹமது கபீர் அவர்களின் தலைமையிலும், மருத்துவ சேவை அணி மாநில பொருளாளர் மஃரூப் அவர்களின் முன்னிலையிலும் நடைப்பெற்றது.

இக்கூட்டத்திற்கு மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு, தலைமை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளை முன்னெடுக்கும் “மக்களுடன் மஜக 2023” செயல் திட்ட பணியை மாவட்ட, நகரங்களில் மேற்கொள்வது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

மேலும் தஞ்சை வடக்கு மற்றும் மத்திய மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது.

Top