You are here

மாண்டஸ் புயல் பாதிப்பு.. கேளம்பாக்கத்தில் மஜக பேரிடர் மீட்புக்குழு பணிகள்…

சென்னை அருகே மாண்டஸ் புயல் நேற்று இரவு கேளம்பாக்கம் பகுதியில் கரையை கடந்தது.

அதைத் தொடர்ந்து அங்கு குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து தற்போது காணப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவு முதல் மஜக பேரிடர் மீட்பு குழுவினர் அரசு அதிகாரிகளுடன் இணைந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைத்தல், அவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்று கொடுத்தல், உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர்.

மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் கேளம்பாக்கம் அன்வர் பாஷா அவர்கள் தலைமையிலான மஜக பேரிடர் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு தேவையான உதவிகள் குறித்து அதிகாரிகளுக்கு எடுத்துக் கூறி வருகின்றனர்.

தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் மஜக-வினர் தொடர்பில் இருந்து களப்பணி ஆற்றி வருகின்றனர்.

Top