ஆம்பூரில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக, திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் K.M.நகர் பகுதியில் ஷாபூத்தீன் (எ) ஷாபூ அவர்களின் தலைமையில்

மஜக மாவட்ட செயலாளர் M.ஜஹிருஸ் ஜமா அவர்களின் முன்னிலையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் மாவட்ட து.செயலாளர் T.R. முன்னா(எ) நஸீர் அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் மஜக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வசீம் ஆம்பூர் நகர செயலாளர் ஜிஷான்,அலீம் மற்றும் பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.